சாலையில் வலம் வந்த 4 கோடி ரூபாய் கார்! யார்துனு தெரிஞ்சா ஸ்டண் ஆயிருவீங்க! அதான் சிகப்பு கலர்ல இருக்கா!

ஸ்விக்கி (Swiggy) மற்றும் ஜொமேட்டோ (Zomato) போன்ற நிறுவனங்கள், வீட்டில் இருந்தபடியே நமக்கு பிடித்தமான உணவை ருசிக்கும் வாய்ப்பை நமக்கு வழங்கியுள்ளன. எனவே ஐடி ஊழியர்கள் உள்பட கை நிறைய சம்பாதிப்பவர்கள் மத்தியில் இந்த நிறுவனங்களின் சேவைக்கு மிகப்பெரிய வரவேற்பு காணப்படுகிறது.

வீட்டில் இருந்து கொண்டே, பிரபலமான ஹோட்டலில் உணவை ஆர்டர் செய்து சாப்பிடும் கலாச்சாரம் அதிகரித்து கொண்டே வரும் நிலையில், ஜொமேட்டோ நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் பிரம்மிக்க வைக்கும் விலையில் புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார். அவர் வேறு யாருமல்ல. ஜொமேட்டோ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும் (CEO), நிறுவனருமான (Founder) தீபீந்தர் கோயல்தான் (Deepinder Goyal) அந்த நபர்.

சாலையில் வலம் வந்த 4 கோடி ரூபாய் கார்! யார்துனு தெரிஞ்சா ஸ்டண் ஆயிருவீங்க! அதான் சிகப்பு கலர்ல இருக்கா!

இந்தியாவில் உள்ள மற்ற பெரும்பாலான தொழில் அதிபர்களை போலவே தீபீந்தர் கோயாலும் விலை உயர்ந்த கார்களை அதிகமாக விரும்ப கூடியவராக அறியப்படுகிறார். இதை நிரூபிக்கும் வகையில் புத்தம் புதிய ஃபெராரி ரோமா (Ferrari Roma) காரை, தீபீந்தர் கோயல் வாங்கியுள்ளார். இந்த காரின் ஆன் ரோடு விலை 4.30 கோடி ரூபாய் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹரியானா மாநிலம் குருகிராம் நகரில் தீபீந்தர் கோயலின் புதிய ஃபெராரி ரோமா கார் சமீபத்தில் வலம் வந்துள்ளது. அங்குதான் ஜொமேட்டோ நிறுவனத்தின் தலைமை அலுவலகம் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஜொமேட்டோ நிறுவனத்தின் லோகோ சிகப்பு கலரில் இருக்கும். அதே சிகப்பு நிறத்தில்தான் தீபீந்தர் கோயலின் புதிய ஃபெராரி ரோமா காரும் வர்ணம் பூசப்பட்டுள்ளது.

சாலையில் வலம் வந்த 4 கோடி ரூபாய் கார்! யார்துனு தெரிஞ்சா ஸ்டண் ஆயிருவீங்க! அதான் சிகப்பு கலர்ல இருக்கா!

கண்ணை பறிக்கும் சிகப்பு நிறத்தில் வந்த அந்த காரை பொதுமக்கள் பலரும் ஆச்சரியத்துடன் பார்த்துள்ளனர். இந்திய சாலைகளில் இதுபோன்ற கார்களை காண்பது என்பது இன்னமும் கூட அரிதான ஒரு விஷயமாகதான் இருக்கிறது. எனவே ஃபெராரி ரோமா காரை பார்த்ததும் பலரும் ஆச்சரியமடைந்து விட்டனர்.

ஃபெராரி ரோமா காரில், 3.9 லிட்டர், ட்வின்-டர்போசார்ஜ்டு வி8 இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 690 பிஎஸ் பவரையும், 760 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தி, சாலைகளில் சீறிப்பாய்ந்து செல்லக்கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூன் செய்யப்பட்டுள்ளது. இந்த இன்ஜினுடன், 8 ஸ்பீடு ட்யூயல் க்ளட்ச் கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் இன்ஜின் உருவாக்கும் சக்தியானது, பின் பக்க சக்கரங்களுக்கு செலுத்தப்படுகிறது. நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டதை போல் தீபீந்தர் கோயல் மிகவும் விலை உயர்ந்த கார்களை அதிகமாக விரும்ப கூடியவர். அவரிடம் ஏற்கனவே போர்ஷே 911 கரேரா எஸ் (Porsche 911 Carrera S) மற்றும் லம்போர்கினி உருஸ் (Lamborghini Urus) உள்பட ஏராளமான கார்கள் இருக்கின்றன.

இதில், லம்போர்கினி உருஸ் இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக உள்ள கார்களில் ஒன்றாகும். திரைப்பட நடிகர்கள், தொழிலதிபர்கள் உள்பட பலரும் லம்போர்கினி உருஸ் காரை சொந்தமாக வைத்துள்ளனர். மும்பை, பெங்களூர் போன்ற இந்தியாவின் பெரு நகர சாலைகளில் லம்போர்கினி உருஸ் கார்களின் தரிசனம் அவ்வப்போது மக்களுக்கு கிடைக்கிறது.

Article Published On: Tuesday, February 28, 2023, 14:37 [IST]
English summary
Zomato ceo deepinder goyal buys ferrari roma price all details
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+