5 கோடி ரூபா காரை போட்டி போட்டு வாங்கி இந்தியா கொண்டு வந்தது அவரா! எல்லாம் நீங்க சாப்பாடு ஆர்டர் போட்ற காசு!

இன்று வீட்டில் உணவு சமைக்க முடியாமல் போனால், ஹோட்டலுக்கு செல்ல வேண்டும் என்ற அவசியமே கிடையாது. விரும்பிய ஹோட்டலில் இருந்து பிடித்தமான உணவை இருக்கும் இடத்திற்கே வரவழைத்து கொள்ள முடியும். இப்படியான வசதியை மக்களுக்கு வழங்கி கொண்டிருக்கும் நிறுவனங்களில் ஒன்றுதான் ஜொமேட்டோ (Zomato). ஜொமேட்டோ நிறுவனம் தொடங்கப்பட்டு, கிட்டத்தட்ட 17 வருடங்கள் ஆகின்றன. ஆம், இந்த நிறுவனம் கடந்த 2008ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இடைப்பட்ட இந்த 17 வருடங்களில் ஜொமேட்டோ நிறுவனம் மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்துள்ளது என்றால் மிகையல்ல.

ஜொமேட்டோ நிறுவனத்தின் இந்த வளர்ச்சிக்கு தீபிந்தர் கோயல் (Deepinder Goyal) ஒரு மிக முக்கியமான காரணமாக திகழ்கிறார். ஜொமேட்டோ நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான தீபிந்தர் கோயல், தற்போது ஜொமேட்டோ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குனராக பணியாற்றி வருகிறார்.

Lamborghini Huracan Sterrato

உயர் பொறுப்பில் இருந்தாலும் கூட, சில சமயங்களில் வாடிக்கையாளர்களுக்கு உணவை டெலிவரி செய்வதற்கு தீபிந்தர் கோயலே நேரடியாக சென்று விடுகிறார். இதன் மூலம் அடிமட்டத்தில் உணவு டெலிவரி ஏஜெண்ட்கள் சந்திக்கும் பிரச்னைகளை அவரால் அறிந்து கொள்ள முடிகிறது. இது போன்ற காரணங்களால், தீபிந்தர் கோயல் மீது நல்ல மதிப்பு இருக்கிறது.

தீபிந்தர் கோயல் தனது வேலையை எவ்வளவு நேசிக்கிறாரோ, அதே அளவிற்கு விலை உயர்ந்த சொகுசு கார்களையும் அதிகம் நேசிக்க கூடியவராக உள்ளார். தீபிந்தர் கோயலின் விலை உயர்ந்த கார் கலெக்ஸனே (Car Collection) இதற்கு சாட்சி. ஆம், தீபிந்தர் கோயலிடம் ஏராளமான கார்கள் உள்ளன.

Deepinder Goyal-Lamborghini Huracan Sterrato

இதில், பென்ட்லீ கான்டினென்டல் ஜிடி டபிள்யூ12 முல்லினர் (Bentley Continental GT W12 Mulliner), ஃபெராரி ரோமா (Ferrari Roma), அஸ்டன் மார்ட்டின் டிபி12 (Aston Martin DB12), போர்ஷே 911 டர்போ எஸ் (Porsche 911 Turbo S) மற்றும் போர்ஷே 911 கரீரா எஸ் (Porsche 911 Carrera S) போன்றவை எல்லாம் குறிப்பிடத்தக்கவை ஆகும்.

இவை மட்டுமல்லாது, லம்போர்கினி உருஸ் (Lamborghini Urus) காரும் கூட தீபீந்தர் கோயலிடம் உள்ளது. இந்த வரிசையில் மற்றொரு லம்போர்கினி காரை தீபிந்தர் கோயல் தற்போது வாங்கியுள்ளார். இம்முறை அவர் வாங்கியிருப்பது லம்போர்கினி ஹூராகேன் ஸ்டேராட்டோ (Lamborghini Huracan Sterrato) ஆகும்.

உலகம் முழுவதும் விற்பனை செய்வதற்காக வெறும் 1,499 லம்போர்கினி ஹூராகேன் ஸ்டேராட்டோ கார்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளன. இதில், ஒன்றை தீபிந்தர் கோயல் வாங்கியுள்ளார். இதன் மதிப்பு சுமார் 5 கோடி ரூபாய் இருக்கும் என தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மிகவும் விலை உயர்ந்த காரில், 5.2 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் வி10 பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 610 பிஎஸ் பவர் மற்றும் 560 என்எம் டார்க் திறனை வாரி வழங்கி, சீறிப்பாய்ந்து செல்லும் வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் உடன், 7 ஸ்பீடு ட்யூயல் க்ளட்ச் டிரான்ஸ்மிஷன் இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இன்ஜின் உருவாக்கும் சக்தியானது, காரின் 4 சக்கரங்களுக்கும் செலுத்தப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: தீபிந்தர் கோயல் விலை உயர்ந்த மற்றும் அரிதான கார்களை அதிகம் நேசிக்க கூடியவர் என்பது, அவர் தொடர்ச்சியாக வாங்கி கொண்டிருக்கும் கார்கள் மூலமாக நமக்கு தெரிய வருகிறது. தற்போது அவர் வாங்கியுள்ள லம்போர்கினி ஹூராகேன் ஸ்டோராட்டோ கார், ப்ளூ அஸ்ட்டீரியஸ் (Blu Astraeus) என்ற நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிறம், லம்போர்கினி ஹூராகேன் ஸ்டோராட்டோ காருக்கு நன்றாக பொருந்தி போகிறது என நாங்கள் கருதுகிறோம். உலகம் முழுவதும் விற்பனை செய்வதற்கு 1,499 லம்போர்கினி ஹூராகேன் ஸ்டேராட்டோ கார்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதால், இந்த காரை சொந்தமாக்க கடும் போட்டி நிலவியிருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.

More from DriveSpark

Article Published On: Monday, March 3, 2025, 13:44 [IST]
English summary
Zomato ceo deepinder goyal buys lamborghini huracan sterrato worth rs 5 crore all details here
மேலும்... #celebrity cars #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+