இப்படியொரு இடத்திலும் உணவு டெலிவிரியா? சொமாட்டோ சிஇஓ எப்படி புது, புது காரை வாங்குகிறார் என்பது இப்போ புரியுது

பலருக்கு பிடித்திருந்தாலும், டெலிவிரி பாய் வேலையில் இருக்கும் கஷ்டங்கள் ஏராளம். புயல், வெயில், மழை என எதையும் பொருட்படுத்தாமல் பணியாற்றினால்தான் போதுமான வருவாயை பெற முடியும். ஏனெனில் பெரும்பாலான டெலிவிரி பாய் வேலைகள், சென்றால்தான் கூலி என்கிற நிலைமையில் உள்ளது. குறிப்பாக, உணவு டெலிவிரி பாய் வேலையில் 24 மணிநேரமும் பணியாற்றுபவர்களும் இருக்கின்றனர். அதேபோல், எந்தவொரு பகுதிக்கும் உணவு டெலிவிரி செய்ய தயாராக இருப்பவர்களும் உள்ளனர். அவ்வாறான உணவு டெலிவிரி பாய்களுள் ஒருவரை பற்றித்தான் இந்த தொகுப்பில் பார்க்கப் போகிறோம்.

ஒரு சிலருக்கு கார்களில் பயணிப்பது என்றால் மிகவும் பிடித்திருக்கும். அதேபோல், சிலர் பைக்கில் ஊர் ஊராக சுற்ற விரும்புவர். ஆனால், மிகவும் சிலர் மட்டுமே சைக்கிளை தொலைத்தூர பயணங்களுக்கு பயன்படுத்த விரும்புகின்றனர். அத்தகையவர்களுள் ஒருவர் தான் வைபவ் என்பவர். 'ஃபேட் பைக்கர் வைபவ்' என்கிற பெயரில் இன்ஸ்டாகிராம் பக்கத்தை வைத்துள்ளார்.

zomato delivery boy off-road riding

இந்த இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தான் சைக்கிளில் செல்லும் பகுதிகளை வீடியோவாக காட்சிப்படுத்தி பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். குறிப்பாக, கரடு, முரடான பாதைகளுக்கு சைக்கிளில் செல்வதை வைபவ் விரும்பக்கூடியவர். அந்த வகையில், சமீபத்தில் பாறை கற்கள் மட்டுமே நிரம்பிய மலைப்பாதை ஒன்றிற்கு சென்றுள்ளார்.

சில மணிநேர சைக்கிளிங்கிற்கு பின் கொஞ்சம் ஓய்வு எடுப்போம் என ஓரிடத்தில் நின்றுள்ளார். அந்த இடமானது வீடுகளே அற்ற வெறும் முட்புதர்கள் மட்டுமே நிரம்பிய இடமாக இருந்துள்ளது. சரி இன்ஸ்டாகிராமில் எத்தனை லைக்குகள் கிடைத்துள்ளன என பார்ப்பதற்காக மொபைல் போனை எடுத்தால், நெட்வொர்க் கிடைக்கவில்லை. இதில் கொஞ்சம் வருத்தத்தில் இருந்த வைபவ்விற்கு அடுத்து நடந்தது பெரிய ஷாக்கிங்காக இருந்துள்ளது.

zomato delivery boy off-road riding

அதாவது, அவர் தனது சைக்கிளுடன் நின்றுக் கொண்டிருந்த நேரத்தில் அதே கரடு, முரடான பாதையில் ஒரு சொமாட்டோ உணவு டெலிவிரி பாய் முதுகில் அவ்வளவு பெரிய பெட்டியுடன் அந்த சவாலான பாதையிலும் பைக்கை ஓட்டியப்படி சென்றுள்ளார். இத்தனைக்கும் அவரிடம் இருந்தது விலையுயர்ந்த அட்வென்ச்சர் பைக்கோ அல்லது பவர்ஃபுல்லான பைக்கோ கிடையாது; ஹோண்டா ஷைன் என்கிற 125சிசி பைக் ஆகும். 100சிசி என்ஜின் உடனும் ஹோண்டா ஷைன் பைக் கிடைப்பது குறிப்பிடத்தக்கது.

அந்த இடத்தில் பைக்கில் ஒருவரை பார்ப்பதே ஆச்சிரியமான விஷயம். ஏனெனில், அந்த பகுதியை சுற்றிப் பார்க்க வந்தவர்கள் கூட தங்களது வாகனங்களை ஓரிடத்தில் நிறுத்திவிட்டு நடந்தப்படி செல்வதை வீடியோவில் பார்க்க முடிகிறது. ஆனால், இந்த டெலிவிரி பாய் விலை குறைவான பைக்கில் முதுகில் பெரிய மூட்டையை சுமந்தப்படி சென்றது வைபவ்விற்கு மட்டுமில்லாமல், அங்கிருந்தவர்கள் அனைவருக்கும் பெரிய ஷாக்கிங்காக இருந்துள்ளது.

zomato delivery boy off-road riding

பெரிய, பெரிய ஆஃப்-ரோடு பைக் ரைடர்கள் கூட இந்த நிகழ்வை பார்த்திருந்தால் ஆச்சிரியப்பட்டு இருப்பர். இந்த சம்பவம் இந்தியாவில்தான் நடந்துள்ளது என்றாலும், சரியாக எந்த பகுதியில் நடந்துள்ளது என்பது தெரியவில்லை. பைக்கின் நம்பர் பிளேட்டை வைத்து பார்க்கும்போது, இது ஹரியானா மாநிலமாக இருக்கலாம். இந்த வீடியோவிற்கு நெட்டிசன்கள் பலரும் தங்களது ஆச்சிரியத்தை வெளிப்படுத்தி உள்ளனர்.

இதேபோன்று, சமீபத்தில் குஜராத்தில் இடுப்பளவு தேங்கி நிற்கும் மழைநீரையும் பொருட்படுத்தாமல் சொமாட்டோ டெலிவிரி பாய் ஒருவர் உணவை கஸ்டமருக்கு டெலிவிரி செய்திருந்தார். பைக்கில் செல்ல முடியாது என்பதற்காக நடந்தே சம்பந்தப்பட்ட கஸ்டமரை சென்றடைந்துள்ளார். அப்போது அந்த கட்டடத்தின் மொட்டை மாடியில் இருந்து எடுக்கப்பட்ட வீடியோ இணையத்தில் கவனத்தை பெற்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த சம்பவத்தில் நாம் சொமாட்டோ டெலிவிரி பாயை பாராட்டினாலும், அதனையும் தாண்டி அவரது கடினமான உழைப்பு நம்மை வருத்தத்திற்கு உள்ளாக்குகிறது. இவ்வாறான கற்கள் நிறைந்த பாதையில் அசால்ட்டாக ஹோண்டா ஷைன் போன்றதான பைக்கில் செல்கிறார் என்றால், இவர் அந்த பகுதியை சேர்ந்தவராக, அடிக்கடி இவ்வாறான பாதையில் சென்றுவந்த அனுபவமிக்கவராகவே இருக்க முடியும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, October 30, 2024, 11:39 [IST]
English summary
Zomato delivery boy rides very bad road on his commuter bike check all details here
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X