தேவதை! ஜொமோட்டோ-ல வேலை செய்யற அழகான பொண்ணு அவங்களா! ஆர்டர் போட்டவருக்கு ஒடம்புல எங்கயோ பெருசா மச்சம் இருக்கு!

சமூக வலை தளங்களில் வைரல் வீடியோ (Viral Video) ஒன்று தற்போது வேகமாக பரவி வருகிறது. இதில் 'மாடர்ன்' ஆக உடை அணிந்த இளம்பெண் ஒருவர், யமஹா ஆர்15 (Yamaha R15) பைக்கை ஓட்டி வருவதை நம்மால் பார்க்க முடிகிறது. பெண்கள் பைக் ஓட்டுவதெல்லாம் தற்போது சர்வ சாதாரணமான ஒரு விஷயமாக மாறி விட்டது என்பது உண்மைதான்.

எனவே இதில் என்ன ஆச்சரியம்? என நீங்கள் கேட்பது புரிகிறது. இந்த வீடியோவில் நாம் பார்க்கும் இளம்பெண், ஜொமோட்டோ (Zomato) டீ-ஷர்ட் அணிந்துள்ளார். அத்துடன் அவரது பைக்கின் பின் பகுதியில், உணவுகளை டெலிவரி செய்வதற்காக பயன்படுத்தப்படும் பெட்டியும் இருக்கிறது. இப்போது சொல்லுங்கள்.

Zomato Delivery Girl

மாடர்ன்-ஆக உடை அணிந்த இளம்பெண் யமஹா ஆர்15 போன்ற ஒரு பைக்கில் ஜொமோட்டோ நிறுவனத்திற்காக உணவு டெலிவரி செய்வதை எங்கேயாவது பார்த்துள்ளீர்களா? இந்த கேள்விக்கு நிச்சயமாக 'இல்லை' என்பதுதான் நம்மில் பெரும்பாலானோரின் பதிலாக இருக்கும். எனவேதான் இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

இந்த வீடியோ மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் நகரில் நடைபெற்றதாக கூறப்படுகிறது. ஆனால் இதன் உண்மை தன்மை பற்றி நமக்கு உறுதியாக தெரியவில்லை. அதாவது இந்த பெண் உண்மையிலேயே ஜொமோட்டோ நிறுவனத்தின் உணவு டெலிவரி கேர்ள்-ஆக வேலை செய்கிறாரா? என்பதை நம்மால் உறுதி செய்ய முடியவில்லை.

Zomato Delivery Girl Riding Yamaha R15

சமூக வலை தளங்களில் பிரபலம் ஆக வேண்டும் என்பதற்காக, இந்த கால இளைஞர்களும், இளம்பெண்களும் பல்வேறு வித்தியாசமான முயற்சிகளை செய்து வருகின்றனர். இந்த வீடியோவும் கூட, வைரல் ஆக வேண்டும் என்பதற்காக திட்டமிட்டு எடுக்கப்பட்டிருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஏனெனில் இது உண்மையிலேயே மிகவும் வித்தியாசமான ஒரு 'கன்டென்ட்' என்பதில் துளியும் சந்தேகமில்லை.

இந்த வீடியோவின் உண்மையான பின்னணி இதுவாக இருந்தால், திட்டம் வெற்றி என்றுதான் கூற வேண்டும். ஏனெனில் இந்த வீடியோ பலரின் கவனத்தையும் ஈர்த்து விட்டது. வீடியோவிலேயே இதை நம்மால் பார்க்க முடிகிறது. ஜொமோட்டோ டீ-ஷர்ட் உடன் பைக் ஓட்டி வந்த இளம்பெண்ணை பலரும் வாயை பிளந்து பார்த்து கொண்டிருந்தனர்.

மறுபக்கம் இது ஜொமோட்டோ நிறுவனத்தின் வியாபார யுக்தி என்றும் கூட தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது இந்த இளம்பெண் மாடல் அழகி என கூறப்படுகிறது. இந்தூர் நகர சாலைகளில் அவர் காலை மற்றும் மாலை நேரங்களில் ஜொமோட்டோ டீ-ஷர்ட் உடன் யமஹா ஆர்15 பைக்கை ஓட்டி வருகிறாராம். இதன் மூலம் தங்கள் நிறுவனத்திற்கு நல்ல விளம்பரம் கிடைக்கும் என ஜொமோட்டோ நிறுவனம் கருதியிருக்கலாம்.

அதற்கு ஏற்ற வகையிலேயே, டெலிவரி கேர்ள்-ஆக வேலை செய்வது மாடல் அழகியா? என பலரும் ஆச்சரியத்துடன் பேசி வருகின்றனர். ஆனால் இந்த தகவலை உறுதி செய்ய முடியவில்லை என்பது இங்கே கண்டிப்பாக குறிப்பிட வேண்டிய விஷயம் ஆகும். எது எப்படியோ வீடியோ வைரல் ஆகி விட்டது.

இந்த பெண்ணின் கையால் உணவு டெலிவரி பெறுவதற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும் எனவும், இவர் டெலிவரி செய்கிறார் என்றால் எத்தனை முறை வேண்டுமானாலும் ஆர்டர் செய்யலாம் என்றும் நெட்டிசன்கள் வேடிக்கையாக கமெண்ட் செய்து வருகின்றனர். நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டதை போல் இந்த வீடியோவில் பயன்படுத்தப்பட்டிருப்பது யமஹா ஆர்15 பைக் ஆகும்.

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் இந்த பைக்கின் ஆரம்ப விலை (Price) 1.82 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இந்த பைக்கின் டாப் மாடலின் விலை 1.97 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ் ஷோரூம் விலை என்பது கவனிக்கத்தக்கது.

யமஹா ஆர்15 பைக்கில், 155 சிசி இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 18.4 பிஎஸ் பவர் மற்றும் 14.2 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் பல்வேறு அதிநவீன வசதிகளையும் (Features) யமஹா ஆர்15 பைக் கொண்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்த இளம்பெண் ஹெல்மெட் அணியாமல் பைக் ஓட்டியுள்ளார். சட்டப்படி பார்த்தல் இது விதிமுறை மீறல். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெட்டிசன்களில் ஒரு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். அதையேதான் நாங்களும் வலியுறுத்துகிறோம். இல்லாவிட்டால் இது தவறான முன்னுதாரணங்களை ஏற்படுத்தி விடும்.

Article Published On: Tuesday, October 17, 2023, 14:07 [IST]
English summary
Zomato delivery girl riding yamaha r15 viral video know all details here
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+