சொமாட்டோ சிஇஓ-வை இந்தியாவே ஆச்சிரியமா பார்க்குது... வருஷத்துக்கு ஒரு காரை வாங்கி போடுகிறார்!!

பொதுவாக, தொழிலதிபர்கள் என்றாலே சொகுசு கார் & பைக்குகளில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்களாக இருப்பார்கள் என்பதை பல நிகழ்வுகளில் பார்த்துள்ளோம். அத்தகைய தொழிலதிபர்களுள் ஒருவர், சொமாட்டோ (Zomato) சிஇஓ தீபிந்தர் கோயல் (Deepinder Goyal) ஆவார். கடந்த சில வருடங்களாக இவர் தொடர்ச்சியாக புது, புது விலையுயர்ந்த கார்களை வாங்குவதை பார்த்து வருகிறோம். அந்த வரிசையில், தற்போது மீண்டும் ஒரு பெண்ட்லீ காரை தீபிந்தர் கோயல் வாங்கியுள்ளார். அப்படி என்ன மாதிரியான பெண்ட்லீ காரை இவர் வாங்கியுள்ளார் என்பதையும், சொமாட்டோ சிஇஓ-விடம் உள்ள மற்ற லக்சரி கார்களை பற்றியும் இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

சொமாட்டோ இந்த பெயரை கேள்விப்படாதவர்களே இல்லை என கூறும் அளவிற்கு, இந்த ஆன்லைன் உணவு டெலிவிரி நிறுவனத்திடம் இருந்து உணவுகளை வாங்கி உண்பவர்களின் எண்ணிக்கை நம் நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 2010ஆம் ஆண்டிலேயே நிறுவப்பட்டு இருந்தாலும், கடந்த 5 வருடங்களில் சொமாட்டோ நிறுவனம் அடைந்திருக்கும் உயரம் மிக பெரியது.

zomato ceo bought bentley continental

2010இல் சொமாட்டோவை நிறுவியவர்களுள் முக்கியமானவர் தான் தீபிந்தர் கோயல் ஆவார். இவர் மிகவும் விலையுயர்ந்த கார்களை வாங்கி குவிப்பதில் ஆர்வமிக்கவராக விளங்குகிறார். தீபிந்தர் கோயலிடம் ஏற்கனவே ஃபெராரி ரோமா, அஸ்டன் மார்டின் டிபி12, போர்ஷே 911 டர்போ எஸ், லம்போர்கினி உருஸ், பிஎம்டபிள்யூ எம்8 காம்பெடிஷன் உள்ளிட்ட கார்கள் உள்ளன.

இதில் அஸ்டன் மார்டின் டிபி12 ஆனது சொமாட்டோ சிஇஓ கடைசியாக வாங்கியிருந்த சூப்பர் கார் ஆகும். ரேசிங் பச்சை என்கிற பிரத்யேகமான பச்சை நிறத்தில் ஜொலிக்கும் இந்த காரை ரூ.4.59 கோடி என்கிற விலையில் தீபிந்தர் கோயல் வாங்கினார். இந்தியாவில் இந்த அஸ்டன் மார்டின் காரை வாங்கிய முதல் நபர் தீபிந்தர் கோயல் என கூறப்படுகிறது. இவரிடம் உள்ள ஃபெராரி ரோமா கார் ரோஸ்ஸோ கோர்ஸா சிவப்பு நிறத்தில் உள்ளது.

zomato ceo bought bentley continental

இந்தியாவில் ரூ.3.76 லட்சம் விலை கொண்ட இந்த ஃபெராரி காரில் 3.9 லிட்டர் டர்போசார்ஜ்டு வி8 என்ஜின் உள்ளது. போர்ஷேவில் 911 டர்போ எஸ், 911 கர்ரேரா என இரு கார்களை தீபிந்தர் கோயல் வைத்துள்ளார். இதில் 911 டர்போ எஸ் காரை ஃபெராரி ரோமாவை வாங்கிய அதேநாளில் தீபிந்தர் கோயல் டெலிவிரி எடுத்திருந்தார். இந்தியாவில் இதன் விலை ரூ.3.3 கோடியாக உள்ளது.

இந்த நிலையில், புதியதாக ரூ.6.5 கோடி மதிப்பிலான பெண்ட்லீ காண்டினெண்டல் ஜிடி ஸ்பீடு (Bentley Continental GT Speed) காரை சொமாட்டோ சிஇஓ வாங்கியுள்ளார். பார்ப்போரை கவர்ந்திழுக்கக்கூடிய பளிச்சிடும் மஞ்சள் நிறத்தில் ஜொலிக்கும் தீபிந்தர் கோயலின் இந்த பெண்ட்லீ கார் டெல்லியில் டிராஃபிக் சிக்னலில் நின்றுக் கொண்டிருந்த போது எடுக்கப்பட்ட படங்கள் கார் கிரேஸி இந்தியா என்கிற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

zomato ceo bought bentley continental

இந்த பெண்ட்லீ காண்டினெண்டல் ஜிடி ஸ்பீடு காரின் மஞ்சள் நிறம் ஆனது மொனாகோ மஞ்சள் என அழைக்கப்படுகிறது. தீபிந்தர் கோயல் இந்த காரை அளவில் பெரியதான 21-இன்ச் அலாய் சக்கரங்கள் உடன் வாங்கியுள்ளார். இந்த சக்கரங்கள் பளபளப்பான கருப்பு நிறத்தில் உள்ளன. காரின் ஃபெண்டர்களில் 'ஸ்பீடு' என்கிற பேட்ஜ் ஆங்கிலத்தில் இருப்பதை காணலாம். இதன் அர்த்தம் என்னவென்றால், இந்த காரில் ஆற்றல்மிக்க டபிள்யூ12 என்ஜின் உள்ளது என்பதாகும்.

பெண்ட்லீ காண்டினெண்டல் ஜிடி ஸ்பீடு காரில் பொருத்தப்படும் 6.0 லிட்டர் ட்வின்-டர்போசார்ஜ்டு டபிள்யூ12 என்ஜின் ஆனது அதிகப்பட்சமாக 650 பிஎச்பி மற்றும் 900 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. இந்த என்ஜின் உடன் 8-ஸ்பீடு இசட்.எஃப் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. என்ஜினின் இயக்க ஆற்றல்கள் ஆல்-வீல்-டிரைவ் சிஸ்டத்தின் மூலமாக காரின் 4 சக்கரங்களுக்கும் ஒரே நேரத்தில் செல்கிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: சொமாட்டோ சிஇஓ தீபிந்தர் கோயல் வைத்திருப்பவை எல்லாம் பல கோடி ரூபாய் மதிப்புள்ள கார்கள் ஆகும். இதில் ஆச்சிரியம் என்னவென்றால், இவற்றை அடுத்தடுத்த வருடங்களில் தீபிந்தர் கோயல் வாங்கியுள்ளார். இதில் இருந்து, சொமாட்டோ நிறுவனத்தின் வளர்ச்சி எந்த அளவிற்கு உள்ளது என்பதை அறியலாம். மேலும், தீபிந்தர் கோயல் கார்களை மட்டுமின்றி அவற்றிற்கான நிறங்களையும் பார்த்து, பார்த்து கவனமாக தேர்வு செய்கிறார் என்பதை இந்த பெண்ட்லீ காண்டினெண்டல் ஜிடி ஸ்பீடு உள்பட அவரது கார்களை பார்க்கும்போது தெரிகிறது.

More from DriveSpark

Article Published On: Friday, August 2, 2024, 11:34 [IST]
English summary
Zomato founder deepinder goyal bought bentley continental gt speed
மேலும்... #off beat #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X