அம்பானியிடம் கூட இல்லாத கார்!! சோமாடோ சிஇஓ வெறும் 14 வருடத்தில் எவ்வளவு பெரிய வளர்ச்சி...
சோமாடோ (Zomato) நிறுவனத்தின் சிஇஓ தீபிந்தர் கோயல் இந்தியாவில் யாரும் வைத்தில்லாத விலை உயர்ந்த அஸ்டன் மார்டின் காரை புதியதாக வாங்கியுள்ளார். அஸ்டன் மார்டினில் அப்படி எந்த மாடலை சோமாடோ சிஇஓ வாங்கியுள்ளார் என்பதையும், அந்த அஸ்டன் மார்டின் காரின் சிறப்பம்சங்களையும் பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
உணவு ஹோம் டெலிவிரி வணிகம் கடந்த 10 வருடங்களில் இந்தியாவில் பெரிய அளவில் வளர்ச்சி கண்டுள்ளது. ஓட்டல்களை தேடி அலையாமல், இருக்கும் இடத்திற்கே உணவை வரவழைத்து உண்பவர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர். நிச்சயமாக, இணைய தள வளர்ச்சி தான் இதனை சாத்தியமாக்கி உள்ளது.

இந்தியாவில் உணவு டெலிவிரி நாடு முழுவதும் பரந்து விரிந்து உள்ளதற்கு நல்ல அடித்தளம் அமைத்து கொடுத்திருக்கும் நிறுவனங்களுள் ஒன்று சோமாடோ ஆகும். இந்த நிறுவனத்தை 2010ஆம் ஆண்டில் துவங்கியவர் தீபிந்தர் கோயல். இவர் தற்போது புதியதாக ஒரு அஸ்டன் மார்டின் காரை வாங்கியுள்ளார். இவர் வாங்கியிருப்பது, அஸ்டன் மார்டின் நிறுவனத்தின் டிபி12 என்கிற லேட்டஸ்ட் கார் ஆகும்.
பிரிட்டிஷ் கார் நிறுவனமான அஸ்டன் மார்டின் இந்தியாவில் அதன் டிபி12 என்கிற சூப்பர் காரை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் அறிமுகப்படுத்தியது. ஆனால், நம் நாட்டில் ஒருத்தரும் இந்த சூப்பர் காரை டெலிவிரி எடுக்கவில்லை. அறிமுகம் செய்யப்பட்டு கிட்டத்தட்ட 6 மாதங்களாகி விட்ட நிலையில், முதல் இந்திய கஸ்டமராக சோமாடோ சிஇஓ தீபிந்தர் கோயல் அஸ்டன் மார்டின் டிபி12 காரை டெலிவிரி பெற்றுள்ளார்.

ஆதலால், இந்தியாவின் முதல் அஸ்டன் மார்டின் டிபி12 கார் இதுவாகும். இந்தியாவில் இந்த அஸ்டன் மார்டின் காரின் எக்ஸ்-ஷோரூம் விலை தற்சமயம் ரூ.4.59 கோடியாக உள்ளது. கவர்ச்சிக்கரமான சாடின் மார்டின் ரேசிங் பச்சை நிறத்தில் டிபி12 காரை தீபிந்தர் கோயல் வாங்கியுள்ளார். அஸ்டன் மார்டின் கார்கள் பொதுவாகவே மிகவும் ஸ்டைலிஷாக இருக்கும் என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும்.
அப்படிப்பட்ட நிறுவனத்தின் லேட்டஸ்ட் காருக்கு இத்தகைய வித்தியாசமான பச்சை நிறம் மேலும் அழகை கூட்டியுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். இந்த கார் தொடர்பான படங்கள் ஆட்டோமொபைலி ஆர்டெண்ட் என்கிற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளன. டெல்லியில் உள்ள செலக்ட் கார்ஸ் என்கிற டீலர்ஷிப் மையத்தின் வளாகத்திற்குள் இருந்து இந்த படங்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவில் அஸ்டன் மார்டின் கார்களை இந்த ஒரேயொரு டீலர்ஷிப் மூலமாக மட்டுமே வாங்க முடியும் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இந்த படங்களின் மூலம் பார்க்கும்போது, சோமாடோ சிஇஓ அளவில்-பெரிய 21-இன்ச் அலாய் சக்கரங்களுடன் அஸ்டன் மார்டின் டிபி12 காரை வாங்கி உள்ளார். இந்த அலாய் சக்கரங்கள் டைமண்ட்-கட் ஃபினிஷிங்கில் உள்ளன. மற்றப்படி, தீபிந்தர் கோயல் வாங்கியுள்ள காரை பற்றிய கூடுதல் விபரங்கள் எதுவும் கிடைக்கவில்லை. இவர் தான் இந்தியாவில் அஸ்டன் மார்டின் டிபி12 காரின் முதல் உரிமையாளர் என்பது மட்டும் உறுதி.
டிபி12 காரை பற்றி சொல்ல வேண்டுமென்றால், அஸ்டன் மார்டின் நிறுவனம் தனது வழக்கமான பாணியை விட்டு புதுமையான டிசைனில் வடிவமைத்துள்ள கார் இதுவாகும். இந்த கார் கிட்டத்தட்ட 80% பிராண்ட் நியூ ஆகும். இந்த காரில் மெர்சிடிஸ்-பென்ஸின் 4.0 லிட்டர் ட்வின்-டர்போசார்ஜ்டு வி8 என்ஜின் பொருத்தப்படுகிறது. 0-இல் இருந்து 100kmph வேகத்தை இந்த கார் வெறும் 3.5 வினாடிகளில் எட்டிவிடக்கூடியது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: சோமாடோ சிஇஓ தீபிந்தர் கோயலிடம் ஏற்கனவே போர்ஷே 911 டர்போ எஸ், ஃபெராரி ரோமா, லம்போர்கினி உருஸ் உள்ளிட்ட லக்சரி கார்கள் உள்ளன. அவற்றுடன் தற்போது அஸ்டன் மார்டின் டிபி12 காரும் இணைந்துள்ளது. ஆனால், மற்ற கார்களை காட்டிலும் டிபி12 தீபிந்தர் கோயலுக்கு நிச்சயமாக ஸ்பெஷலானதாக இருக்கும். ஏனெனில், இந்தியாவில் முதல் இவர் கஸ்டமர் இவர்தான் மற்றும் இந்த காரை வாங்கும் ஐடியா பெரும்பாலும் நிறைய பேருக்கு தோன்றுவதில்லை.


Click it and Unblock the Notifications









