கமிஷன் பாத்தே இவ்ளோ சம்பாதிச்சிட்டாரா... சொமேட்டோ சிஇஓ இடத்தில் இருக்கும் மிக விலையுயர்ந்த இரு கார்கள்!

சொமேட்டோ சிஇஓ தீபிந்தர் கோயல் இடத்தில் இருக்கும் இரு முக்கியமான கார் மாடல்கள் பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க உள்ளோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

கமிஷன் பாத்தே இவ்ளோ சம்பாதிச்சுட்டு இருக்காரே... சொமேட்டோ சிஇஓ இடத்தில் இருக்கும் மிக விலையுயர்ந்த இரு ஆடம்பர கார்கள்!

தனக்கென சொந்தமாக ஒரு ஹோட்டல்கூட இல்லாமல் சாப்பாடு டெலிவரி சேவையில் ஈடுபட்டு வரும் நிறுவனம்தான் சொமேட்டோ. இந்த நிறுவனத்தை உருவாக்கியவர் தீபிந்தர் கோயல். சொமோட்டாவின் சிஇஓ-வாக பணியாற்றி வரும் இவர் மிகப்பெரிய வாகன ஆர்வலராக இருக்கின்றார். இவரிடத்தில் இருக்கும் இரு முக்கியமான கார் மாடல்கள் தற்போது பயன்பாட்டில் இருக்கின்றன. இவைகுறித்த தகவலையே இந்த பதிவில் பார்க்க உள்ளோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

கமிஷன் பாத்தே இவ்ளோ சம்பாதிச்சுட்டு இருக்காரே... சொமேட்டோ சிஇஓ இடத்தில் இருக்கும் மிக விலையுயர்ந்த இரு ஆடம்பர கார்கள்!

சொமேட்டோ சிஇஓ பயன்படுத்தி வரும் இரு விலையுயர்ந்த கார்கள்குறித்த படங்களை ஆட்டோமொபிலி ஆர்டென்ட் தளம் வெளியிட்டுள்ளது. இரு கார்களும் சாலையில் பயணிப்பதைப் போன்ற படங்களை அது வெளியிட்டுள்ளது. தீபிந்தர் கோயல், லம்போர்கினி உருஸ் (Lamborghini Urus) மற்றும் போர்ஷே 911 கர்ரேரா எஸ் (Porsche 911 Carerra S) ஆகிய இரு சூப்பர் கார்களே பயன்பாட்டில் இருக்கின்றன.

கமிஷன் பாத்தே இவ்ளோ சம்பாதிச்சுட்டு இருக்காரே... சொமேட்டோ சிஇஓ இடத்தில் இருக்கும் மிக விலையுயர்ந்த இரு ஆடம்பர கார்கள்!

இந்த இரண்டுமே விலையுயர்ந்த கார்கள் மட்டுமில்லைங்க அதீத திறனை வெளிப்படுத்தக் கூடியவையும் ஆகும். அதிலும், லம்போர்கினி உருஸ் மிக அதிக திறனை வெளிப்படுத்தக் கூடிய எஸ்யூவி ரக காராக இருக்கின்றது. இதுமட்டுமில்லைங்க அந்த காரில் சொகுசு வசதிகளும் மிக தாராளமாக வழங்கப்பட்டிருக்கின்றன. இதனால்தான் இந்த சொகுசு இந்திய லக்சூரி கார் விரும்பிகள் மிக அமோகமான வரவேற்பை வழங்கிக் கொண்டிருக்கின்றனர்.

கமிஷன் பாத்தே இவ்ளோ சம்பாதிச்சுட்டு இருக்காரே... சொமேட்டோ சிஇஓ இடத்தில் இருக்கும் மிக விலையுயர்ந்த இரு ஆடம்பர கார்கள்!

இந்தியர்கள் மட்டுமில்லைங்க உலகளவில் உள்ள சொகுசு விரும்பிகள் இந்த காருக்கு சூப்பரான வரவேற்பை கொடுத்து வருகின்றனர். இத்தகைய அதீத வரவேற்பு லம்போர்கினி உருஸ் காரை நிறுவனத்தின் சக்சஸ்ஃபுல் வாகனமாக மாற்றியிருக்கின்றது. இந்த மாதிரியான ஓர் வாகனத்தையே தீபிந்தர் கோயலும் பயன்படுத்தி வருகிறார்.

கமிஷன் பாத்தே இவ்ளோ சம்பாதிச்சுட்டு இருக்காரே... சொமேட்டோ சிஇஓ இடத்தில் இருக்கும் மிக விலையுயர்ந்த இரு ஆடம்பர கார்கள்!

லம்போர்கினி நிறுவனம் உருஸ் எஸ்யூவி காரை முதன் முதலில் 2018 ஆம் ஆண்டிலேயே இந்த உலகிற்கு அறிமுகப்படுத்தியது. நீண்ட வருட இடைவெளிக்கு பின்னர் நிறுவனம் தற்போது விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கும் முதல் எஸ்யூவி கார் இதுவாகும். இதற்கு முன்னதாக நிறுவனம் எல்எம்002 எனும் காரையே விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருந்தது. 1980களிலேயே அது விற்பனைச் செய்யப்பட்டது.

கமிஷன் பாத்தே இவ்ளோ சம்பாதிச்சுட்டு இருக்காரே... சொமேட்டோ சிஇஓ இடத்தில் இருக்கும் மிக விலையுயர்ந்த இரு ஆடம்பர கார்கள்!

ஆனால், இந்த வாகனத்தைக் காட்டிலும் அதிக ஸ்போர்ட்டியான தோற்றம் கொண்டதாக புதிய லம்போர்கினி உருஸ் உருவாக்கப்பட்டிருக்கின்றது. ஆடி ஆர்எஸ்க்யூ8, பென்ட்லீ பென்டேகா மற்றும் போர்ஷே கேயென்னே ஆகிய கார்களைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் அதே பிளாட்பாரத்தைப் பயன்படுத்தியே லம்போர்கினி உருஸ் தயாரிக்கப்படுகின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த அனைத்து பிராண்டும் ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் மற்றொரு அங்கம் ஆகும்.

கமிஷன் பாத்தே இவ்ளோ சம்பாதிச்சுட்டு இருக்காரே... சொமேட்டோ சிஇஓ இடத்தில் இருக்கும் மிக விலையுயர்ந்த இரு ஆடம்பர கார்கள்!

லம்போர்கினி உருஸ் காரில் அதிக திறனை வெளிப்படுத்துவதற்காக 4.0 லிட்டர் ட்வின் டர்போசார்ஜட் வி8 பெட்ரோல் மோட்டார் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 650 பிஎஸ் பவரையும், 850 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. இந்த மோட்டாரில் 8 ஸ்பீடு இசட்எஃப் தானியங்கி டிரான்ஸ்மிஷன் பயன்படுத்தப்பட்டுள்ளது. லம்போர்கினி உருஸ் எஸ்யூவி காரின் தற்போதைய விலை ரூ. 3.15 கோடிகள் ஆகும்.

கமிஷன் பாத்தே இவ்ளோ சம்பாதிச்சுட்டு இருக்காரே... சொமேட்டோ சிஇஓ இடத்தில் இருக்கும் மிக விலையுயர்ந்த இரு ஆடம்பர கார்கள்!

இத்தகைய உச்சபட்ச விலையில் விற்கப்படுகின்ற போதிலும் சொமேட்டோ சிஇஓ போன்ற இந்தியாவின் செல்வந்தர்கள் அக்காருக்கு அதிகளவு வரவேற்பை வழங்கிக் கொண்டிருக்கின்றனர். இதுவரை சுமார் 200 யூனிட்டுகள் உருஸ் இந்தியாவில் விற்பனையாகியிருக்கின்றன. இந்தளவு அதிக எண்ணிக்கையில் வேறு எந்த லம்போர்கினி காரும் இந்தியாவில் விற்பனையாகவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.

கமிஷன் பாத்தே இவ்ளோ சம்பாதிச்சுட்டு இருக்காரே... சொமேட்டோ சிஇஓ இடத்தில் இருக்கும் மிக விலையுயர்ந்த இரு ஆடம்பர கார்கள்!

லம்போர்கினி உருஸ் காரை போலவே போர்ஷே 911 கர்ரேரா எஸ் காருக்கும் சூப்பர் கார் விரும்பிகள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. சுமார் 10 ஆண்டுகளுக்கும் மேலாக இக்கார் விற்பனையில் இருக்கின்றது. இந்த ஸ்போர்ட்ஸ் காரில் 3.0 லிட்டர் ஃபிளாட் 6 சிலிண்டர் பாக்ஸ் பெட்ரோலே பயன்படுத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 450 பிஎச்பி பவரையும், 530 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது.

கமிஷன் பாத்தே இவ்ளோ சம்பாதிச்சுட்டு இருக்காரே... சொமேட்டோ சிஇஓ இடத்தில் இருக்கும் மிக விலையுயர்ந்த இரு ஆடம்பர கார்கள்!

இந்த மோட்டாரில் 8 ஸ்பீடு ட்யூவல் க்ளட்ச் டிரான்ஸ்மிஷனே பயன்படுத்தப்பட்டுள்ளது. இது் நேரடியாக பின் வீலுக்கு இயக்க திறனை வழங்கும். இந்த இரு அம்சங்களும் இணைந்து மிக சூப்பரான இயக்க அனுபவத்தை வழங்கும்.இதனால்தான் இக்காருக்கு சூப்பர் கார் பிரியர்கள் மத்தியில் 10க்கும் அதிகமான ஆண்டுகள் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

கமிஷன் பாத்தே இவ்ளோ சம்பாதிச்சுட்டு இருக்காரே... சொமேட்டோ சிஇஓ இடத்தில் இருக்கும் மிக விலையுயர்ந்த இரு ஆடம்பர கார்கள்!

இந்தியாவில் சொமேட்டோ சிஇஓ தவிர இன்னும் பலர் போர்ஷே 911 கர்ரேரா எஸ் காரை பயன்படுத்தி வருகின்றனர். நடிகர் ராம் கபூர், மம்தா மோஹன்தாஸ், கிரிக்கெட் வீரர்கள் சச்சின் டெண்டுல்கர் மற்றும் சுரேஷ் ரெய்னா உள்ளிட்ட பல பிரபலங்கள் சூப்பர் காரை பயன்படுத்தி வருகின்றனர்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Zomato founder deepinder goyal s luxury cars lamborghini urus and porsche 911 carrera s spotted
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X