ஸூம் நிறுவனத்துக்கு சொந்தமான வாடகை கார் பயங்கர விபத்து!

Written By:

ஓட்டுனர்களை நியமிக்காமல், கார் ஓட்ட தெரிந்த வாடிக்கையாளர்களே சொந்தமாக வாடகைக்கு எடுத்து ஓட்டும் வசதியை பெங்களூரை சேர்ந்த ஸூம் கார் நிறுவனம் வழங்குகிறது.

குறைவான டெபாசிட் மற்றும் சேத மதிப்பீடு போன்ற வர்த்தக கொள்கைகளால் ஸூம் கார் நிறுவனம் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்தநிலையில், ஸூம் கார் நிறுவனத்துக்கு சொந்தமான ஃபோர்டு ஃபிகோ கார் பயங்கர விபத்தில் சிக்கிய படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.

 விபத்து

விபத்து

கார் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து பல்டியடித்துள்ளது. இதில், கார் கடுமையாக சேதமடைந்திருக்கிறது.

காரணம்

காரணம்

விபத்திற்கான முழுமையான காரணம், நடந்த இடம் விபரங்கள் இதுவரை கிடைக்கவில்லை. மேலும், காரை ஓட்டிச் சென்றவர் மற்றும் பயணிகளின் நிலை பற்றியும் தகவல் இல்லை.

நல்ல விஷயம்

நல்ல விஷயம்

குறைவான டெபாசிட், வாடிக்கையாளர்களுக்கு அருகாமையில் சேவை மையங்கள் போன்றவற்றால் ஸூம் காரின் வாடகை கார் திட்டம் நன்றாகவே இருக்கிறது. ஆனால், இப்போது நடந்திருக்கும் விபத்து அதன் அபாயத்தையும் உணர்த்தியுள்ளது.

அபாயம்

அபாயம்

நம்மூரில் ஓட்டுனர் உரிமம் வழங்கும் நடைமுறைகளில் அதிக குளறுபடிகள் உள்ளன. போதிய பயிற்சி இல்லாதவர்கள் ஓட்டுனர் உரிமத்தை எளிதில் பெற்றுவிடுகின்றனர். இந்த சூழலில் மிக எளிதான நடைமுறைகளுடன் கிடைக்கும் ஸூம் கார் நிறுவனத்தின் வாடகை கார்களை போதிய பயிற்சி இல்லாதவர்கள் எளிதாக வாடகைக்கு எடுத்தும் ஓட்டும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஆபத்து...

ஆபத்து...

போதிய பயிற்சி இல்லாமல் கார்களை சொந்தமாக வாடகைக்கு எடுத்து ஓட்டுபவர்களால், அவர்களுக்கு மட்டுமின்றி அந்த சாலையில் வரும் பலருக்கும் எமனாக மாறும் நிலை இருக்கிறது. பலர் ஆர்வக் கோளாறில் குறைந்த வாடகைக்கு கிடைப்பதால் தங்களுக்கு போதிய அனுபவம் இல்லாத கார்களை வாடகைக்கு எடுத்து ஆபத்தை ஏற்படுத்துகின்றனர் என்பது பரவலான கருத்தாக உள்ளது.

 
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
There is no news as in how the crash happened or what happened to the occupants of this Figo or even the location. Only wish nothing bad. So, one thing to always keep in mind while renting out such cars or even driving your own is that keep safety and the Indian traffic laws in mind.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark