ஹோன்டாவின் சூப்பர் பைக்

இந்நிறுவனம் சிறிய என்ஜின்களை கொண்ட பைக்குகளை இந்தியாவில் அறிமுகம் செய்தால் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்பதில் உறுதியாக நம்புகிறது.
இதன் 100 சிசி பைக்குள் அடுத்த ஆண்டின் முதல் காலாண்டில் இந்தியாவில் விற்பனைக்கு வரும். முதல் ஆண்டில் 2 லட்சம் பைக்குகளை இந்நிறுவனம் தயாரிக்க திட்டமிட்டுள்ளது.
இந்திய பைக் விரும்பிகள் மத்தியில் சிபிஆர் மாடல்களுக்கு எப்போதும் தனி மவுசு என்பதால் ஹோன்டா நிறுவனம் சிபிஆர்100ஆர் மற்றும் சிபிஆர்1000ஆர்ஆர் பயர்பிளைடு ரக பைக்குகளை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விலை ரூ 9.5 லட்சம் முதல் 12.5 லட்சம் வரை.
இந்த ஆண்டின் இறுதிக்குள் ஹோன்டா இந்த வகை பைக்குகள் 100யை இந்தியாவில் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.
இதற்கான திட்டங்களை அந்நிறுவனம் விரைவாக செயலபடுத்த துவங்கியுள்ளது. இது பொருளாதார வீழ்ச்சியில் இருந்து தப்பிக்க ஹோன்டா நிறுவனம் மேற்கொண்டுள்ள யுக்தியாக கருதப்படுகிறது.


Click it and Unblock the Notifications








