டிவிஎஸ் ஸ்டீரிக்..

Sania Mirza with TVS Scooty
டிவிஎஸ் நிறுவனம் தனது புதிய மாடல் ஸ்கூட்டி ஒன்றை அடுத்த நிதியாண்டில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. ஸ்டீரிக் என பெயரிடப்பட்டுள்ள கொண்ட இந்த ஸ்கூட்டர் 90 சிசி என்ஜினை கொண்டது. இதில் பொருத்தப்பட்டிருக்கும் லைட்டெக் என்ஜின் பெண்கள் எளிதாக பயன்படுத்துவதற்கு ஏற்றவகையில் குறைந்த எடையுடன் வரவிருக்கிறது.

இந்த மாடல், ஸ்கூட்டியின் முந்தைய மாடல்களை போல் 4.7 லி்ட்டர் எரிபொருள் டேங்குடன் வரும். ஸ்டீரிக் வண்டிகளில் விளையாட்டு பிரியர்களுக்கான தயாரிப்பான ஸ்போர்ட்டி ஸ்டீரிக்கின் விளம்பர தூதராக சானியா மிர்சா அறிவிக்கப்பட்டுள்ளார்.

பொதுவாகவே பெண்களுக்கான ஸ்கூட்டி போன்ற வாகனங்கள் அனைத்தும் கிட்டதட்ட ஒரே வடிவத்தில் தான் வருகின்றன. இதை மாற்றும் வகையில் இந்த வாகனம் வித்தியாசமாகவும் சிறப்பாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

பள்ளி மற்றும் கல்லூரி சீசனை குறிவைத்து தனது ஸ்டீரிக்கை களமிறக்க டிவிஎஸ் திட்டமிட்டுள்ளது. கடந்தாண்டு மின்சார ஸ்கூட்டியை அறிமுகம் செய்த இந்த நிறுவனத்தின் ஸ்கூட்டி மாடல்களில் இது நான்காவதாகும்.

பொருளாதார வீழ்ச்சியையும் மீறி டிவிஎஸ் நிறுவனத்தின் விற்பனை கடந்த செப்டம்பருக்கு பின் நல்ல வளர்ச்சி அடைந்துள்ளது. இவை மாதந்தோறும் சுமார் 1 லட்சம் இரண்டு சக்கர வாகனங்களை விற்று வருகின்றன. அவற்றில் 20 சதவீதம் ஸ்கூட்டி மாடல்களாகும். இதில் தமிழ்நாட்டில் விற்பனையானது 60 சதவீதம்.

More from DriveSpark

Article Published On: Wednesday, March 11, 2009, 16:56 [IST]
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+