ஹோன்டாவின் புதிய ஆக்டிவா

இதன் எடையை குறைக்க ஏபிஎஸ் பிளாஸ்டிக் பேனல்களை பயன்படுத்தியுள்ளது. நான்கு ஸ்ட்ரோக் என்ஜினுடன் வரும் இந்த புதிய ஆக்டிவா 109 சிசி திறன் கொண்டது. புதிய டிசைன் காரணமாக இதன் எரிபொருள் கொள்ளளவு 5.3 லிட்டராக குறைந்துள்ளது. இதில் கிக் மற்றும் ஆட்டோ ஸ்டார்ட் என இரண்டு வசதிகளும் இருக்கின்றன.
இதில் இருக்கும் சென்ட்ரல் பிரேகிங் சிஸ்டம், முன் மற்றும் பின் பிரேக்கள் இரண்டையும் இணைத்து செயல்படுகிறது. ஸ்டைல் மற்றும் என்ஜினில் மாற்றம் செய்துள்ள ஹோன்டா நிறுவனம் இதில் செல்பவர்களுக்கு மேலும் சில சொகுசு வசதிகளை செய்து தந்துள்ளது. கிளவ் பாக்ஸ், கீ ஷட்டர் மற்றும் பின்பக்கத்தில் டப்-அப் டியூப் ஆகியவைகளை பொருத்தியுள்ளது.
இதன் நீளம் 4 செமீ., அகலம் 5 செமீ., குறைக்கப்பட்டுள்ளது. ஆனால், உயரம் 17 செமீ., உயர்த்தப்பட்டுள்ளது. இது ஜெனி கிரே மெட்டாலிக், கேன்டி லுசிட் ரெட், கறுப்பு, போர்ஸ் சில்வர் மெட்டாலி்க், வைல்டு பர்பிள் மெட்டாலிக் மற்றும் பியர்ல் சன்பீம் ஒயிட் ஆகிய 6 நிறங்களில் வந்துள்ளது.
டெல்லியில் இதன் விலை ரூ. 39 ஆயிரத்து 800. புனேவில் ரூ. 41 ஆயிரத்து 300, பெங்களூரில் ரூ. 41 ஆயிரத்து 340 மற்றும் கொல்கத்தாவில் ரூ. 41 ஆயிரத்து 320க்கு கிடைக்கிறது. இதெல்லாம் புதிய ஆக்டிவாவின் ஸ்டான்டர்டு மாடலின் விலை. இதை தவிர்தது ஆக்டிவா டீலக்ஸ் என்ற மாடலும் விரைவில் சந்தைக்கு வர இருக்கிறது.


Click it and Unblock the Notifications








