புதிய ஹோன்டா ஆக்டிவா

நான்கு ஸ்ட்ரோக் என்ஜினுடன் வரும் இந்த புதிய ஆக்டிவா 109 சிசி திறன் கொண்டது. இது ஆறு வண்ணங்களில் விற்பனைக்கு வந்துள்ளது. ஸ்டைல், கூடுதல் மைலேஜ் போன்ற சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளதால் விற்பனை படு ஜோராக இருக்கும் என அந்நிறுவனம் எதிர்பார்க்கிறது.
சென்னையில் இந்த புதிய ஆக்டிவாவின் ஸ்டான்டர்டு மாடலின் விலை ரூ. 41 ஆயிரத்து 855 மட்டுமே. ஆக்டிவா டீலக்ஸ் மாடல் வரும் ஆக்ஸ்டில் தமிழ்நாட்டில் விற்பனைக்கு வருகிறது.
வரும் நிதியாண்டில் ஹோன்டா நிறுவனம் சுமார் 5.5 லட்சம் ஆக்டிவா வாகனங்களை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications