நிபந்தனைகளுடன் டிவிஎஸ் பிளேம் தயாரிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி

இந்தியாவின் முன்னணி பைக் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான பஜாஜ், டுவின் ஸ்பார்க் பிளக்ஸ் எனப்படும் பைக் தொழில்நுட்பத்துக்கான காப்புரிமையை பெற்றுள்ளது.
இந்நிலையில் சென்னையை சேர்ந்த பிரபல டிவிஎஸ் நிறுவனமும் இதே தொழில்நுட்பத்துடன் கூடிய டிவிஎஸ் பிளேம் என்ற 125 சிசி திறன் கொண்ட ஸ்போர்டிங் பைக்கை தயாரித்தது. இதை அறிந்த பஜாஜ் அந்த பைக்கை விற்பனை செய்ய கூடாது. இது காப்புரிமை மீறல் எனக் கூறி வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் டிவிஎஸ் நிறுவனத்துக்கு இந்த வாகனத்தை தயாரிக்க அனுமதி கொடுத்தது. இதையடுத்து பஜாஜ் நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.
இதன் விசாரணை நேற்று நீதிபதி சுதர்சன் ரெட்டியின் தலைமையிலான பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. நீதிபதி தனது தீர்ப்பில் கூறுகையில், டிவிஎஸ் நிறுவனத்துக்கு இது தொடர்பாக நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளோம். அதே நேரத்தில் பிளேம் மாடல் பைக்கையும் தயாரிப்பதற்கு அவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதை விற்பனைக்கு அனுப்பக்கூடாது.
நீதிமன்றத்தின் இந்த உத்தரவை இரு நிறுவனங்களும் விளம்பரம் உள்ளிட்ட வேறு காரணத்துக்காக பயன்படுத்தக்கூடாது. இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் நடக்கும் என்றார் நீதிபதி.


Click it and Unblock the Notifications








