மஹிந்திராவின் புதிய துரோ பவர் & ரோடியோ!

Mahindra flyte12
டெல்லி: மஹிந்த்ரா அண்ட் மஹிந்த்ரா நிறுவனம் அடுத்து இரு புதிய ஸ்கூட்டர்களை அறிமுகம் செய்துள்ளது. இவை கியர் இல்லாத ரகத்தைச் சேர்ந்தவை.

கைனடிக் ஹோண்டா நிறுவனத்தை விலைக்கு வாங்கியுள்ளது மஹிந்தரா அண்ட் மஹிந்தரா நிறுவனம், ஏற்கெனவே ஏற்கனவே ஃபிளைடி என்ற ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது. இப்போது புதிதாக மேலும் இரண்டு கியர்லெஸ் ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

'துரோ பவர் மற்றும் ரோடியோ' என இந்த மாடல்களுக்குப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த இரண்டு கியர்லெஸ் ஸ்கூட்டர்களும், முந்தைய கைனடிக் மாடல்களை அடிப்படையாக வைத்தே உருவாக்கப்பட்டுள்ளன. இதில் துரோ பவர் ஸ்கூட்டர், நோவா ஸ்கூட்டர் அடிப்படையிலும், ரோடியோ ஸ்கூட்டர், ஃபிளைடி ஸ்கூட்டர் அடிப்படையிலும் உருவாக்கப்பட்டுள்ளன என இந்த நிறுவனத்தின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துரோ ஸ்கூட்டரின் முன்பகுதியில் காரில் உள்ளது போன்ற டாஷ் போர்டு ஏற்படுத்தப்பட்டுள்து. மேலும், சீட்டுக்கு அடியில் நிறைய இடவசதியும் உள்ளது. சென்னையில் இதன் விலை ரூ.41 ஆயிரம்.

ரோடியோ ஸ்கூட்டரில் டிஜிட்டல் டிஸ்ப்ளே உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. இதன் விலை ரூ.38 ஆயிரம்.

More from DriveSpark

Article Published On: Tuesday, September 15, 2009, 13:55 [IST]
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+