கவாஸாகி நிஞ்ஜா!..250 சி்சி, 6 கியர்...ரூ.2.8 லட்சம்!!

தாய்லாந்திலிருந்து இறக்குமதி செய்து விற்கப்படும் இந்த பைக் அதிகபட்சமாக 250 சிசி திறன் கொண்டது. 6 கியர்கள் கொண்ட இந்த பைக் இந்த ஆண்டின் இறுதி அல்லது அடுத்த ஆண்டு விற்பனைக்கு வரும் எனத் தெரிகிறது.
இந்த பைக்கின் அதிகபட்ச ஸ்பீட் 174 கிமீ. 6 செகண்டுகளில் 100 கிலோமீட்டர் வேகத்தைத் தொட்டுவிடும் திறன் கொண்டது இந்த பைக்.
அதிக திறன் மற்றும் வேகம் கொண்ட பைக் என்பதால் இதன் மைலேஜ் லிட்டருக்கு 30 கிமீக்குள்தான் இருக்கும் என்கிறார்கள்.
இப்போது அனைத்து பஜாஜ் ஷோரூம்களிலும் இந்த பைக்கை காட்சிக்கு வைக்க ஏற்பாடு செய்துவருகிறார்கள்.


Click it and Unblock the Notifications








