சென்னை- தயாரிப்பை இரட்டிப்பாக்கும் என்பீல்டு

ஐஷர் மோட்டார்ஸின் ஓர் அங்கமான, ராயல் என்பீல்டின் சென்னை பிளான்ட்டில் தற்போது, 50 ஆயிரம் யூனிட்டுகள் தயார் செய்யப்படுகின்றன. அடுத்த மூன்றாண்டுகளுக்குள் இதை ஒரு லட்சமாக விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக ரூ.65 கோடி முதலீடு செய்யப்படும் என்று ஐஷர் மோட்டார்ஸ் நிர்வாக இயக்குனர் சித்தார்த்த லால் தெரிவித்துள்ளார்.
ராயல் என்பீல்டு, தனது தயாரிப்புகளை ஐரோப்பா மற்றும் அமெரிக்க நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. எனினும், லத்தின் அமெரிக்கா, ஆப்ரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதில் தற்போது அதிக கவனம் செலுத்தப்படுகிறது.
தற்போது மொத்த விற்பனையில் ஏற்றுமதி அளவு 5 சதவீதம் என்ற அளவில் உள்ளதை, 10 முதல் 15 சதவீதமாக உயர்த்தவும் என்பீல்டு இலக்கு நிர்ணயித்துள்ளது. இதேபோல் மொத்த விற்பனையும், இந்தாண்டு 50 ஆயிரம் யூனிட்டுகளை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ராயல் என்பீல்டு நிறுவனம் 800 சிசி, 1000சிசி என்ஜின் வகைகளையும் தயாரிக்க திட்டமிட்டுள்ளது. ஆனால், 'இப்போதைக்கு இந்திய சந்தைக்கான 350 சிசி பைக் மற்றும் வெளிநாட்டு சந்தைக்கான 500 சிசி பைக்குகளிலேயே எங்களின் கவனம் உள்ளது' என்று லால் கூறினார். கடந்த 9 மாதங்களில் ராயல் என்பீல்டின் வருமானம் ரூ.300 கோடியை தாண்டியுள்ளதாகவும் லால் கூறினார்.


Click it and Unblock the Notifications








