சுஸுகி ஜி.எஸ்.150 ஆர்-'என்டிடிவி பிராஃபிட் சிறந்த பைக் 2010' விருது

என்டிடிவி நிறுவனத்தின் பிராஃபிட் டிவி, கார் இந்தியா மற்றும் பைக் இந்தியா ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்த விருதினை வழங்கியுள்ளன.
ஒவ்வொரு ஆண்டும் சிறந்த கார், பைக் உள்ளிட்ட வாகனங்களைத் தேர்வு செய்து விருது வழங்கி வரும் இந்த நிறுவனங்கள், 5-வது ஆண்டாக நடத்தும் விழா இது.
2010-ம் ஆண்டுக்கான சிறந்த மோட்டார் சைக்கிள் பிரிவில் (160 சி.சி. வரை திறன் கொண்டவை), சுஸுகி 'சுஸுகி ஜி.எஸ்.,150 ஆர்' தேர்வு செய்யப்பட்டது.
இதன் எஞ்சின் 150 சிசி திறன் கொண்டது. போர் ஸ்ட்ரோக், ஏர் கூல் தொழில் நுட்பத்தில் உருவாக்கப்பட்டது.
பொதுவாக அதிக உந்து சக்தி எஞ்ஜின்கள் கொண்ட பைக்குகள் நல்ல மைலேஜ் தருவதில்லை. இந்த முரண்பாட்டை உடைக்கும் விதத்தில் அதிக உந்து சக்தி மற்றும் மைலேஜ் வரும் வகையில் சுஸுகி பைக் வடிவமைக்கப்பட்டுள்ளதால் இந்த விருது வழங்கப்படுவதாக விருதுக் குழு தெரிவித்தது.
டெல்லியில் நடந்த விழாவில் இந்த விருதினை சுஸுகி நிறுவனத்தினரிடம் வழங்கப்பட்டது.


Click it and Unblock the Notifications








