கார்களைப் போலவே மோட்டார் சைக்கிள்களின் விலையும் உயரும்

By
Suzuki GS
டெல்லி: உற்பத்தி வரி அதிகரிப்பு காரணமாக கார்களைப் போலவே மோட்டார் சைக்கிள்களின் விலையும் ஏறப் போகிறது.

நேற்றைய பட்ஜெட்டில் இதுவரை 8 சதவீதமாக இருந்த உற்பத்தி வரியை 2 சதவீதம் கூட்டி 10 சதவீதமாக்கி விட்டார் பிரணாப் முகர்ஜி.

இதனால் பெரிய ரக கார்களின் விலை பெருமளவில் அதிகரிக்கவுள்ளது. அதிகபட்சம் ரூ. 41,000 வரை கார் விலை உயரும்.

மாருதி நிறுவனம் நேற்று நள்ளிரவு முதல் தனது கார்களின் விலையை அதிகபட்சம் ரூ. 13,000 வரை உயர்த்தியுள்ளது.

பஜாஜ் ஆட்டோ நிர்வாக இயக்குநர் ராஜீவ் பஜாஜ் கூறுகையில்,அரசு உயர்த்தி இருக்கும் வரி உயர்வு, கார் வாங்குவோர் மீதுதான் போய்ச் சேரும் என்றார்.

டாடா நிறுவனம் தனது சிறிய ரக கார்களின் விலையையும் சேர்த்து உயர்த்துகிறது. ரூ.5 ஆயிரம் முதல் ரூ.6 ஆயிரம் வரை உயர்த்துகிறது. போர்டு இந்தியா நிறுவனமும் தனது கார்களின் விலையை அதிகரிக்கிறது.

இதேபோல மோட்டார் சைக்கிள்களின் விலையும் உயருகிறது. ஹீரோ ஹோண்டா பைக்குகளின் விலை ரூ. 500 முதல் ரூ. 1200 வரை உயருகிறது.

டி.வி.எஸ். நிறுவனம் ரூ.350 முதல் ரூ.1,200 வரை அதிகரிக்கிறது.

இதுதவிர லாரி, பஸ் போன்ற கனரக வாகனங்களின் விலையும் அதிகபட்சம் ரூ. 70,000 வரை உயருகிறதாம்.

More from DriveSpark

Article Published On: Saturday, February 27, 2010, 12:02 [IST]
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+