அக்டோபரில் 48% விற்பனை உயர்வு... டிவிஎஸ் சாதனை!

By
TVS Sales
சென்னை: இந்த அக்டோபரில் மட்டும் இரு சக்கர வாகன விற்பனையில் 48 சதவீத உயர்வு கண்டுள்ளது டிவிஎஸ் நிறுவனம்.

தமிழகத்தைச் சேர்ந்த முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனம் டிவிஎஸ். மொபட், மோட்டார் சைக்கிள், ஸ்கூட்டர் மற்றும் ஆட்டோ விற்பனையில் முன்னணியில் உள்ள நிறுவனம்.

இந்த நிறுவனத்தின் அக்டோபர் மாத விற்பனை நல்ல உயர்வு கண்டுள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 131941 யூனிட்டுகளாக இருந்த இந்நிறுவனத்தின் விற்பனை, இநத் ஆண்டு அதே கால கட்டத்தில் 48 சதவீதம் உயர்ந்து 195271 யூனிட்டுகளாக உள்ளது.

இரு சக்கர வாகன விற்பனையில் இது பெரிய சாதனையாகும்.

அதேபோல, ஏப்ரல் 2010 முதல் அக்டோபர் 2010 வரையிலான அரையாண்டு விற்பனை 1162861 யூனிட்டுகளாக உயர்ந்துள்ளது. இதற்கு முந்தைய ஆண்டு இதே கால கட்டத்தில் 868509 யூனிட்டுகளாக இருந்தது. இது ஆறு மாத நிகர விற்பனையில் 34 சதவீத உயர்வாகும்.

உள்நாட்டு சந்தையிலும் இந்த நிறுவனத்தின் விற்பனை அளவு 45 சதவீதம் உயர்ந்துள்ளது.

குறிப்பாக மோட்டார் சைக்கிள் பிரிவில் நல்ல முன்னேற்றம் காணப்படுகிறது. கடந்த ஆண்டு அக்டோபரில் 56465 மோட்டார் சைக்கிள்களை உள்நாட்டில் விற்ற டிவிஎஸ், இந்த ஆண்டு அதே அக்டோபரில் 84233 மோட்டார் சைக்கிள்களை விற்றுள்ளது.

ஸ்கூட்டர் பிரிவில் மட்டும் 55 சதவீத விற்பனை உயர்வு காணப்படுகிறது.

வெளிநாடுகளுக்கான ஏற்றுமதியில் 45 சதவீத உயர்வு ஏற்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபரில் 912 ஆட்டோக்களை விற்ற இந்நிறுவனம் இந்த ஆண்டு 3449 ஆட்டோக்கள் விற்றுள்ளது.

More from DriveSpark

Article Published On: Thursday, November 4, 2010, 11:25 [IST]
English summary
Leading two and three wheeler manufacturer TVS Motor Company has registered a total sales growth of 48 per cent in October.The company registered total sales of 1,95,271 units in October against 1,31,941 units in the same period last year. During the month, total two wheeler sales grew by 46 percent
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+