வெகோ ஸ்கூட்டருக்கு கிராக்கி-ஓசூர் உற்பத்தித் திறனை பெருக்கும் டிவிஎஸ்

TVS Wego
சென்னை: 2009ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட வெகோ ஸ்கூட்டருக்கு நல்ல கிராக்கி ஏற்பட்டுள்ளதால், இதன் உற்பத்தியை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது டிவிஎஸ் மோட்டார் நிறுவனம். இதற்காக ஓசூரில் உள்ள தனது தொழிற்சாலையின் உற்பத்தித் திறனை அது மேம்படுத்தவுள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெகோ அறிமுகமானது. தனது இன்னொரு தயாரிப்பான அக்ஸஸ் மற்றும் ஹோண்டா ஆக்டிவாவுக்கு கடும் போட்டியாக மாறியுள்ளது வெகோ. இந்த புதிய வகை, கியர் இல்லாத ஸ்கூட்டர் மாடலுக்கு நல்ல கிராக்கி ஏற்பட்டுள்ளதால் இதன் உற்பத்தியை பெருக்கவுள்ளது டிவிஎஸ்.

தமிழகத்தில்தான் வெகோவுக்கு நல்ல கிராக்கி ஏற்பட்டுள்ளதாம். அகில இந்திய அளவில் கடந்த ஆண்டு அறிமுகமானபோதிலும் தமிழகத்தில் அடுத்த ஆண்டு ஜனவரி அல்லது பிப்ரவரியில் மார்க்கெட்டுக்கு வருகிறது வெகோ. அதேபோல நாட்டின் கிழக்குப் பகுதிகளிலும் விரைவில் இது மார்க்கெட்டுக்கு வரவுள்ளது. பிற பகுதிகளில் தற்போது வெகோ அலை படு வேகமாக பரவி வருகிறது.

தமிழகத்திலும், கிழக்கு இந்தியாவிலும் வெகோ அறிமுகமாகும்போது தேவை பல மடங்கு அதிகரிக்கும் என்பதால் ஓசூர் தயாரிப்பு ஆலையின் தயாரிப்புத் திறனை மேம்படுத்த திட்டமிட்டுள்ளது டிவிஎஸ்.

ஓசூரில் தற்போது 12,000 வெகோ ஸ்கூட்டர்கள் தயாரிக்கப்படுகின்றன. அதை 20,000 ஆக உயர்த்த அது திட்டமிட்டுள்ளது.

கடந்த நவம்பர் மாதத்தில் டிவிஎஸ் நிறுவனம் தனது டூவீலர் பிரிவில் 27 சதவீத விற்பனை உயர்வை சந்தித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

வெகோவையும் சேர்த்தால் டிவிஎஸ் நிறுவனம் பல்வேறு வகையான ஸ்கூட்டர்களை தயாரிக்கும் ஒரே நிறுவனம் என்ற பெயரைப் பெறும். தற்போது ஸ்கூட்டி டீன்ஸ், ஸ்கூட்டி டீன்ஸ் எலக்ட்ரிக், ஸ்கூட்டி பெப் பிளஸ், ஸ்கூட்டி ஸ்னீக் ஆகிய விதம் விதமான ஸ்கூட்டர் மாடல்களை, அதிலும் வயதுக்கேற்றபடியான ஸ்கூட்டர்களை அது தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Tuesday, December 14, 2010, 19:47 [IST]
English summary
Country"s second largest two-wheeler manufacturer TVS Motor Company plans to ramp up its manufacturing facility at Hosur in Tamil Nadu as part of meeting "huge" demand for its scooterette Wego. The company had showcased the scooterette in November 2009. Now backed by huge demand, the Hosur-headquartered company plans to increase its capacity at its plant for production of Wego, TVS Motor Company President (Marketing and Sales) H S Goindi said.
மேலும்... #டிவிஎஸ் #tvs motor
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+