ரூ 45,950-க்கு புதிய சூப்பர் ஸ்ப்ளண்டர்... அறிமுகப்படுத்துகிறது ஹீரோ ஹோண்டா!

இரு சக்கர வாகன தயாரிப்பில் நாட்டில் முன்னணி நிறுவனமாகத் திகழ்கிறது ஹீரோ ஹோண்டா.
125 சிசி திறன் கொண்ட புதிய சூப்பர் ஸ்ப்ளெண்டர் பைக்குகளைத் தயாரித்துள்ள இந்நிறுவனம், அவற்றை டெல்லியில் ரூ 45950-என விலை நிர்ணயித்துள்ளது. பிற நகரங்களில் விலை லேசாக மாறுபடும்.
இதுகுறித்து அந்நிறுவனத்தின் துணைத் தலைவர் அனில் துவா கூறுகையில், "பொதுவாக 125 சிசி பிரிவில் வாகன விற்பனை மந்தமாகவே உள்ளது. சமயத்தில் இந்தப் பிரிவில் வீழ்ச்சி ஏற்படுவதும் உண்டு. அதை மாற்ற விரும்புகிறோம். அதனால்தான், சூப்பர் ஸ்ப்ளெண்டர் புதிய மாடலை 125 சிசி திறன் கொண்டதாக மாற்றியுள்ளோம். இந்தப் பிரிவில் நிச்சயம் 20 சதவீதம் வரை விற்பனை உயர்வு காண முடியும் என நம்புகிறோம்" என்றார்.
புதிய ஸ்ப்ளெண்டர் வந்ததும், ஏற்கெனவே மார்க்கெட்டில் உள்ள சூப்பர் ஸ்ப்ளெண்டர் மாடல் நிறுத்தப்படும் என்றும் ஹீரோ ஹோண்டா அறிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








