ராஜஸ்தானில் ஹோண்டா மோட்டார் சைக்கிள் ஆலை

இந்தத் தொழிற்சாலையில் ரூ.500 கோடி முதலீடு செய்ய இருப்பதாக இந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த நிறுவனத்திற்கு தற்போது ஹரியானா மாநிலம் மானேசரில் தொழிற்சாலை உள்ளது. இந்தத் தொழிற்சாலையின் உற்பத்தித் திறன் இந்த ஆண்டு இறுதிக்குள் 15 லட்சம் வாகனங்களாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந் நிலையில், இதன இருசக்கர வாகன விற்பனை அதிகரித்து வருவதால் ராஜஸ்தானில் இரண்டாவது தொழிற்சாலையை அமைக்கிறது ஹோண்டா.
இந்தத் தொழிற்சாலை ஆண்டுக்கு 6 லட்சம் வாகனங்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாக இருக்கும். இது, 2011ம் ஆண்டில் இருந்து செயல்பட தொடங்கும்.
கடந்த 2009-10ம் ஆண்டில் இந்த நிறுவனம் 5.20 லட்சம் மோட்டார் சைக்கிள்களையும், 7.50 லட்சம் ஸ்கூட்டர்களையும் (ஹோண்டா ஆக்டிவா உள்ளிட்டவை) விற்பனை செய்துள்ளது.


Click it and Unblock the Notifications








