பஜாஜ் பைக்குகள் விலை ரூ. 1000 வரை உயர்வு: ஜன. 1 முதல் அமல்

By
Bajaj Sales
டெல்லி: இந்தியாவின் இரண்டாவது மிகப் பெரிய இரண்டு சக்கர வாகனத் தயாரிப்பாளரான பஜாஜ் நேற்று தங்கள் பைக்ககுகளின் விலையை ரூ. 1000 வரை உயர்த்தவிருப்பதாக அறிவித்தது. இந்த விலை மாற்றம் வரும் ஜனவரி மாதம் 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

இது குறித்து பஜாஜ் ஆட்டோவின் (இரண்டு சக்கர வாகனங்கள்) தலைவர் எஸ். ஸ்ரீதர் கூறியதாவது,

வாகனத் தயாரிப்புக்குத் தேவைப்படும் பொருட்களின் விலை உயர்ந்த வண்ணம் உள்ளது. அதனால் தான் பைக்குகளின் விலையை உயர்த்துகிறோம். இந்த விலை உயர்வால் விற்பனை பாதிக்காது என்று எதிர்பார்க்கிறோம் என்று அவர் கூறினார்.

நாட்டின் மிகப்பெரிய இரு சக்கர வாகனத் தயாரிப்பாளரான ஹீரோ ஹோன்டா கடந்த வாரம் தான் அதன் பைக்குகளின் விலையை ரூ. 500 முதல் 1500 வரை உயர்த்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Wednesday, December 15, 2010, 14:56 [IST]
English summary
India"s second largest two wheeler maker Bajaj is increasing its bikes" prices by up to Rs. 1000 due to increasing input costs. This price change will come to practice from January 1, 2011.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+