பஜாஜ் ஆட்டோவின் அறிமுகம் புதிய அவென்ஜர் 220 சி.சி. க்ரூசர் பைக்

இதன் முந்தைய மாடல் பைக்கில் 200 சி.சி. இன்ஜின் இருந்தபோதிலும், இந்த புதிய அவென்ஜரில் அதிக செயல்திறன் கொண்ட பெரிய இன்ஜின் உள்ளது.
அவென்ஜரின் ஷோரூம் விலை ரூ. 69,000. பஜாஜ் நிறுவனத்தின் 'பைக்' பயணம் சில ஆண்டுகளுக்கு முன்பு தான் தொடங்கியது என்றாலும் அது வெற்றிப்பாதையில் சென்று கொண்டிருக்கிறது. அவென்ஜர் 200 சி.சி. பைக்கின் அறிமுகத்தால் உண்மையான க்ரூசர் பைக் ஓட்டும் சந்தோஷத்தை பஜாஜ் அளிக்கிறது.
ரூ. 1 லட்சத்தில் கிடைக்கும் ஒரே க்ரூசர் பைக் பஜாஜ் அவென்ஜர் தான் என்று அந்நிறுவனத்தின் தலைவர் எஸ். ஸ்ரீதர் தெரிவித்தார்.
முந்தைய அவென்ஜர் 220 பைக்கில் ஆற்றல்மிக்க இன்ஜின் இருந்தபோதிலும் இந்த புதிய இன்ஜின் சிறந்த பிக்அப் மற்றும் அதிக செயல்திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








