செப்டம்பரில் பஜாஜ் பைக்குகளின் விற்பனை 26 % அதிகரிப்பு: ஏற்றுமதியிலும் ஏறுமுகம்

கடந்த மாதம் 3,14,515 இரு சக்கர வாகனங்களை விற்றுள்ளது. கடந்த ஆண்டு இதே மாதத்தில் பஜாஜ் 2,49,133 இரு சக்கர வாகனங்களை விற்பனை செய்திருந்தது.
செப்டம்பரில் அதிகமாக விற்றது பஜாஜ் டிஸ்கவர் 100 தான். பஜாஜ் ஆட்டோவின் எற்றுமதியும் 26.3 சதவகிதம் அதிகரித்துள்ளது. பஜாஜ் கடந்த மாதம் 1,01,960 ஆட்டோக்களை ஏற்றுமதி செய்துள்ளது. கடந்த ஆண்டு இதே மாதத்தில் 80,681 ஆட்டோக்களை ஏற்றுமதி செய்தது.
உள் நாட்டிலும் கடந்த ஆண்டு இதே மாதத்தில் விற்ற 31121 ஆட்டோக்களை விட இந்த ஆண்டு 38,254 ஆட்டோக்கள் விற்பனை ஆகியுள்ளது.
ஒட்டுமொத்தமாக 2009-ம் ஆண்டு செப்டம்பர் மாத்தில் விற்ற 2,80,916 யூனிட்களை விட அதிகமாக இந்த செப்டம்பரில் 3,52,769 யூனிட்கள் விற்றுள்ளது.


Click it and Unblock the Notifications








