ஹீரோ ஹோண்டா புது ஸ்பிளன்டர் விலை ரூ. 41,950
ஹீரோ ஹோண்டா நிறுவனம் தனது புதிய ஸ்பிளென்டர் புரோ பைக்கை களம் இறக்கியுள்ளது. இந்த புதிய பைக், முறையே ரூ. 39,950 மற்றும் ரூ. 41,950 என 2 விலைகளில் கிடைக்கும்.

ஏற்கனவே சூப்பர் ஸ்பிளென்டரை அது அறிமுகப்படுத்தியது. தற்போது ஸ்பிளென்டர் புரோவை அறிமுகப்படுத்தவுள்ளது. இதன் என்ஜின் புதுப் பொலிவு பெற்றுள்ளது.
புதிய ஸ்பிளென்டர் புரோ பார்க்கவே பளிச்சென உள்ளது. இந்த வண்டி இளைஞர்கள் மத்தியில் மிகப் பெரிய ஹிட் ஆகும் என ஹீரோ ஹோண்டா நம்பிக்கையுடன் கூறுகிறது.
இந்த பைக்குக்காக புக் செய்து காத்திருக்கத் தேவையில்லை. நாடு முழுவதும் உள்ள டீலர்களிடமும், ஷோ ரூம்களிலும் ஏற்கனவே பைக் ஸ்டாக்கில் உள்ளதால் வாங்கியவுடனேயே எடுத்துக் கொண்டு போகலாமாம்.
விரைவில் மேலும் சில புதிய ரகங்களை அறிமுகப்படுத்தும் திட்டத்தில் உள்ளது ஹீரோ ஹோண்டா.
ஹீரோ ஹோண்டா நிறுவனத்தின் விற்பனை கடந்த ஆகஸ்ட் மாதம் 2.28 சதவீதம் அதிகரித்து 4,24,617 ஆக இருந்தது. இது கடந்த ஆண்டு இதே மாதத்தில் 4,15,137 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








