பெயிண்டிங்கால் தாமதமாகும் ராயல் என்பீல்ட் பைக் 'டெலிவரி'!

ஆனால், ராயல் என்பீலட் மோட்டர் சைக்கிள்களுக்கு டிமாண்ட் அதிகரித்துள்ள நிலையில், வாடிக்கையாளர்கள் புக்கிங் செய்துவிட்டு 6 மாதம் வரை காத்திருக்க வேண்டியுள்ளது.
திருவொற்றியூரில் உள்ள என்பீ்ல்ட் தொழிற்சாலையில் மாந்தோறும் 4,500 பைக்குகளை தயாரிக்க முடியும் என்ற நிலையில், மாதந்தோறும் ஆர்டர்களே 6,500யைத் தாண்டி வருகிறது. இதனால் புக் செய்தால் 6 மாதம் கழித்தே பைக்கை டெலிவரி செய்யும் நிலைக்கு இந்த நிறுவனம் தள்ளப்பட்டுள்ளது.
இது குறித்து இந்த நிறுவன தலைமை செயல் அதிகாரி ரவிச்சந்திரன் கூறுகையில், ராயல் என்பீல்ட் கிளாசிக் ரக பைக்குகளின் சிறப்பு அம்சமே அதன் பெயிண்டிங் தான். இது மிகுந்த நேரம் எடுக்கும் சமாச்சாரமாகும். இதை ஏனோதானோ என்று செய்ய முடியாது. குறைவான பணியாட்கள், வசதிகளுடன் இந்த பைக்குகளின் பெயிண்டிங்கை விரைவில் முடிப்பது சாத்தியமில்லை. இதனால் தான் வாடிக்கையாளர்கள் புக் செய்துவிட்டு காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இந்த சிக்கலைத் தீர்க்க தீவிரமான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளோம் என்றார்.
இதற்கிடையே இப்போது அகமத்நகரில் உள்ள கைனெடிக் மோட்டார் சைக்கிள் உதிரி பாக தயாரிப்பு தொழிற்சாலையில் ராயல் என்பீல்ட் பைக்குகளின பெயிண்டிங் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால் விரைவிலேயே வாடிக்கையாளர்கள் காத்திருக்கும் காலம் மிக மிகக் குறையும் என்று தெரிகிறது.
இந்தியாவில் மட்டுமின்றி அமெரிக்கா உள்பட பல நாடுகளுக்கும் தமிழகத்திலிருந்து ராயல் என்பீ்ல்ட் மோட்டர் சைக்கிள்கள் ஏற்றுமதியாகி வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








