இந்தியாவில் சுசூகியி்ன் 3 புதிய பைக்குகள்!

கடந்த ஆண்டு இந்தியாவில் 1.88 லட்சம் மோட்டார் சைக்கிள்கள், ஸ்கூட்டர்களை சுசூகி விற்பனை செய்தது. இதை 3 லட்சமாக உயர்த்தவும் திட்டமிட்டுள்ளது.
100 சிசி பைக்குகள் விற்பனையைப் பொறுத்தவரை ஹீரோ ஹோண்டா, பஜாஜ் ஆகிய நிறுவனங்களை விட மிகவும் பின்தங்கியுள்ளது சுசூகி என்பது குறிப்பிடத்தக்கது.
மாருதி நிறுவனத்துடன் இணைந்து சுசூகி தயாரிக்கும் கார்கள தான் இந்திய சந்தையில் 50 சதவீதத்தை பூர்த்தி செய்கின்றன. ஆனால், மோட்டார் சைக்கிள்களைப் பொறுத்தவரை சுசூகியின் பங்கு 2 சதவீதம் மட்டுமே.
இதனால் நவீன ரக பைக்குகளை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த சுசூகி திட்டமிட்டுள்ளது. 125 சிசி பைக்கான செயுஸ், ஜிஎஸ் 150ஆர் மற்றும் இன்னொரு 150 சிசி திறன் கொண்ட பைக் என வரிசையாக தனது புதிய மோட்டார் சைக்கிள்களை சுசூகி இந்தியாவி்ல் அறிமுகப்படுத்தவுள்ளது.
இது தவிர ரூ. 10 முதல் 12 லட்சம் மதிப்பு்ள ஹையபுசா, இன்ட்ரூடர், பேண்டிட் (இது 1,250 சிசி திறன் பைக்) ஆகிய மோட்டார் சைக்கிள்களையும் இந்தியாவில் விற்க முடிவு செய்துள்ளது.


Click it and Unblock the Notifications








