டிவிஎஸ் டூவீலர்களின் விற்பனை டிசம்பரில் 34% அதிகரிப்பு
சென்னை: டிவிஎஸ் நிறுவனத்தின் டூவீலர்கள் விற்பனை கடந்த டிசம்பர் மாதம் 34 சதவீத உயர்வைக் கண்டுள்ளது.

2009ம் ஆண்டு டிசம்பர் மாதம் டிவிஎஸ் நிறுவனத்தின் டூவீலர்கள் விற்பனை எண்ணிக்கை 1.19 லட்சமாக இருந்தது. இது கடந்த ஆண்டு இதே காலகட்ட்தில் 89,285 ஆக இருந்தது.
2009ம் ஆண்டு டிசம்பர் மாதம் வரையிலான மொத்த காலகட்டத்தில் டிவிஎஸ் நிறுவனத்தின் டூவீலர் விற்பனை (11.09 லட்சம் டூவீலர்கள்) 10 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு இது 10.06 லட்சமாக இருந்தது.
கடந்த ஆண்டு டிசம்பரில் நிறுவனத்தின் உள்ளூர் விற்பனை அளவும் (1.02 லட்சம்) 42 சதவீத உயர்வைக் கண்டுள்ளது. இது 2008ம் ஆண்டு இதே காலகட்டத்தில் 72,355 ஆக இருந்தது.


Click it and Unblock the Notifications








