ஸ்கூட்டி டீன்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பை நிறுத்தியது டி.வி.எஸ்.

நம் நாட்டு மக்களுக்கு அதிநவீன தொழில்நுட்பங்கள் இன்னும் பழக்கமாகவில்லை. இதற்கு உதாரணம் டி.வி.எஸ். ஸ்கூட்டி டீன்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர். இதற்கு அவ்வளவாக கிராக்கி இல்லாததால் இந்த வகை ஸ்கூட்டர் தயாரிப்பை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது டி.வி.எஸ். நிறுவனம். அதேபோல மின்சாரத்தில் இயங்கும் ஆட்டோ ரிக்ஷா அறிமுகத்தையும் தள்ளிப்போட்டுள்ளது அந்த நிறுவனம்.
தற்போது எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு அவ்வளவாக மார்க்கெட் இல்லாததால், சாதாரன ஸ்கூட்டர் தயாரிப்பில் டி.வி.எஸ். கவனம் செலுத்தும் என்று அந்நிறுவனத்தின் விளம்பரத் துறை தலைவர் கோயின்டி தெரிவித்துள்ளார்.
2008-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்திய மார்க்கெட்டில் டி.வி.எஸ். ஸ்கூட்டி டீன்ஸ் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், 2009-ம் ஆண்டு மே மாதத்திலேயே அதன் தயாரிப்பு நிறுத்தப்பட்டது. இதன் விலை ரூ. 29,000.
வருடத்திற்கு 40,000 யூனிட்கள் வரை விற்க திட்டமிடப்பட்டது. ஆனால், திட்டம் நிறைவேறவில்லை. இருந்த போதிலும், இந்த ஸ்கூட்டரை வாங்க விரும்புவோர் குறிப்பிட்ட டீலர்கள் மூலம் வாங்கலாம். பழைய ஸ்டாக்கில் இருந்து விநியோகம் செய்யப்படும்.


Click it and Unblock the Notifications