ஹரியானாவுக்கு வரும் ஹார்லி-டேவிட்சன்

Harley Davidson
அமெரிக்காவின் பிரபல மோட்டார் சைக்கிள் தயாரிப்பாளரான ஹார்லி-டேவிட்சன் நிறுவனம் தனது அசெம்பிளிங் பிரிவை ஹரியானா மாநிலத்தில் அமைக்கவுள்ளது.

இதன் மூலம் இந்திய சந்தைக்குள் நுழைவதற்கான முதல் அடியை அது எடுத்து வைக்கிறது. அடுத்த நிதியாண்டின் முதல் பாதியில், ஹரியானாவில் தனது அசெம்பிளிங் பிரிவை அது தொடங்கத் திட்டமிட்டுள்ளது.

அமெரிக்காவுக்கு வெளியே ஹார்லிக்கு தற்போது பிரேசில்தான் ஒரு உற்பத்திப் பிரிவு உள்ளது. தற்போது இந்தியாவில் அது தொடங்கவுள்ளது 2வது பிரிவாகும்.

இந்த ஆலைக்காக எவ்வளவு பணத்தை அது முதலீடுசெய்யப் போகிறது, இங்கு எத்தனை மோட்டார் சைக்கிள்கள் அசெம்பிளிங் செய்யப்படும்என்பது குறித்து ஹார்லி இதுவரை தெரிவிக்கவில்லை.

தற்போது தனது தயாரிப்புகளை அமெரிக்காவிலிருந்து நேரடியாக ஏற்றுமதி செய்து வருகிறது ஹார்லி. ஆனால் அமெரிக்காவுக்கு வெளியேயும் பிரிவுகளை ஆரம்பித்தால் விற்பனையை அதிகரிக்க முடியும் என்பதால் பிரேசிலில் முதலிலும், இப்போது இந்தியாவிலும் தனது அசெம்பிளிங் பிரிவுகளை அது தொடங்குகிறது.

ஹரியானா பிரிவுக்கான பணிகள் முடிந்த பின்னர் உதிரி பாகங்கள் அமெரிக்காவிலிருந்து ஹரியானாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு அசெம்பிளிங் பணிகள் தொடங்கி விடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹார்லி-டேவிட் நிறுவனம் மொத்தம் 12 வகையான மாடல்களில் பைக்குளை தயாரிக்கிறது. இதில் சில மாடல்கள் மட்டுமே ஹரியானாவில் அசெம்பிளிங் செய்யப்படும். மற்றவை தொடர்ந்து அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும்.

வருகிற டிசம்பர் மாதம் பிஎம்டபிள்யூ இந்தியாவில் தனது மோட்டார் சைக்கிள் உற்பத்தியை தொடங்கவுள்ளது. இது ஹார்லிக்கு கடும் சவாலாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவைப் பொறுத்தவரை மோட்டார் சைக்கிள் மார்க்கெட்டில் ஹீரோ ஹோண்டா, பஜாஜ், டிவிஎஸ் மோட்டார் ஆகியவைதான் கோலோச்சி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Wednesday, November 3, 2010, 15:24 [IST]
English summary
The world fame US based motorcycle manufacturer Harley-David is to make its presence in the Indian market on firm foot. It will install an assembly plant in Haryana during the first half of the next year. This will become the company’s second outside plant after Brazil. However, there is no information about the capacity and the likely investment for this facility. The company’s President and Chief Operating Officer said that the response to the initial launches in the Indian market has boosted the company’s presence and the time has come to widen its wings with this assembling facility
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+