விற்பனையில் அசத்தும் யமாஹா-சுசூகி பைக்குகள்!

By
Yamaha June Sales Up
அடுத்தடுத்து புதிய மாடல்களை அறிமுகம் செய்ததால் இந்தியாவில் யமாஹா நிறுவனத்தின் மோட்டார் சைக்கிள்கள் விற்பனை 32 சதவீதம் அதிகரித்துள்ளது.

யமாஹா அறிமுகப்படுத்திய FZ 16, 150 சிசி பைக்குக்கு இந்திய வாலிபர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த பைக்கை மேலும் நவீனப்படுத்தி FZ S என்ற பெயரில் விற்பனைக்கு விட்டது யமாஹா. இதற்கும் வரவேற்பு சிறப்பாக உள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

அடு்த்ததாக யமாஹா அறிமுகப்படுத்திய YBR110 மற்றும் R15 மாடல்கள் மிக அதிகமாக விலையுடன் இருந்தாலும் விற்பனை சூடு பிடித்துள்ளது.

அதே போல இன்னொரு ஜப்பானிய நிறுவனமான சுசூகியின் இரண்டு சக்கர வாகன விற்பனையும் பெருமளவு உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த நிறுவனம் தனது விற்பனையை 44 சதவீதம் அதிகரித்துள்ளது.

இதன் GS150R ரக 150 சிசி பைக் மற்றும் 125cc அக்ஸெஸ் ஸ்கூட்டர் ஆகியவையே இந்த வெற்றிக்குக் காரணம். இவை இரண்டுமே விற்பனையில் சாதனை படைத்து வருகின்றன.

இந் நிலையில் ஸெயுஸ் மற்றும் ஹீட் ஆகிய மாடல் பைக்குகளை சுசூகி சமீபத்தில் அறிமுகம் செய்துள்ளது. அத்துடன் விரைவில் GSX-R1000, பேண்டிட் ஆகிய அதிக விலை கொண்ட ஸ்டைலான சூப்பர் பைக்குகளையும் சுசூகி இந்தியாவில் அறிமுகப்படுத்தவுள்ளது.

GSX-R1000 (1255cc) பைக்கின் விலை ரூ. 13 லட்சமாகவும், பேண்டிட்டின் விலை ரூ. 8.5 லட்சமாகவும் இருக்குமாம்.

More from DriveSpark

Article Published On: Friday, July 2, 2010, 17:22 [IST]
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+