இந்தியாவில் ஸ்கூட்டர் விடும் யமஹா!

இந்தியாவில் ஸ்கூட்டர் விற்பனைக்கு உள்ள வரவேற்பு, மார்க்கெட் நிலவரம் குறித்து தற்போது ஆராய்ந்து வரும் யமஹா, விரைவில் வாடிக்கையாளர்கள் விரும்பும் வகையிலான ஸ்கூட்டர்களை விற்பனைக்கு விடுகிறது.
இதுகுறித்து சமீபத்தில் அறிவித்த இந்திய யமஹா மோட்டார்ஸ் நேஷனல் பிஸினஸ் தலைவர் பங்கஜ் துபே, "இந்தியச் சாலைகளுக்கு ஏற்ற புதிய ஸ்கூட்டர்கள் தயாரிப்பதில் இப்போது கவனம் செலுத்தி வருகிறோம். ஆண்டுக்கு 80 லட்சம் மோட்டார் சைக்கிள்களுக்கு மேல் விற்பனையாகும் அளவு பரந்து விரிந்தது இந்திய மார்க்கெட். இதில் ஸ்கூட்டர்களின் பங்களிப்பை அதிகரிப்பதே எங்கள் நோக்கம்" என்றார்.
ஏற்கெனவே மோட்டார் சைக்கிள் உற்பத்தியில் யமஹா நிறுவனம் கணிசமான பங்களிப்பை ஆற்றியுள்ளது.
இந்திய மோட்டார் சைக்கிள் சந்தையில் 75 சதவிகித இடத்தை பைக்குகளே ஆக்கிரமித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








