இந்தோனேஷியாவில் பல்சர்-220ஐ அறிமுகம் செய்யும் பஜாஜ்

இந்தோனேஷியாவில் தற்போது பல்சர் 135 பைக் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால், கடந்த நிதி ஆண்டில் ரூ.15.9 கோடியாக இருந்த பஜாஜ் ஆட்டோவின் இழப்பு ரூ. 11.2 கோடியாக குறைந்துள்ளது.
இதனால், உற்சாமடைந்துள்ள பஜாஜ் ஆட்டோ, அங்கு பல்சரின் புதிய வேரியண்டுகளை அறிமுகப்படுத்த திட்டமி்டடுள்ளது. இதன்மூலம், அங்கு ஏற்பட்டு வரும் இழப்பை வெகுவாக குறைக்க முடியும் என்று கருதுகிறது.
இந்தோனேஷியாவில் பல்சர் 135 பைக், அசெம்பிள் செய்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், பல்சர் பைக்கின் 220 சிசி மாடலையும் அடுத்ததாக அறிமுகப்படுத்த பஜாஜ் ஆட்டோ முடிவு செய்துள்ளது.
இதனால், அங்கு ஏற்படும் நஷ்டத்தை குறைத்து லாபகரமான பாதையை நோக்கி நிறுவனத்தை திருப்ப முடியும் என பஜாஜ் கருதுகிறது.
இதேபோன்று, நடப்பு நிதி ஆண்டில் கேடிஎம் பைக்குகளையும் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் பஜாஜ் ஆட்டோ திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications








