சாகச வீரர்களுக்கான 'டர்ட்'பைக்கை அறிமுகப்படுத்தும் ஹீரோ ஹோண்டா

ஹீரோ ஹோண்டா என்றாலே ஸ்மூத்தான எஞ்சினை கொண்ட மோட்டார்சைக்கிள்கள் என்ற எண்ணம்தான் நம்மிடம் பரவலாக இருக்கிறது. ஆனால், புதிதாக அறிமுகப்படுத்தப்பட உள்ள டர்ட் பைக் இந்த எண்ணத்தை உடைத்தெறியும் என ஹீரோ ஹோண்டா வட்டாரங்கள் தெரிவித்தன.
நடப்பு நிதி ஆண்டு முடிவதற்குள் சந்தையில் கால் பதிக்க உள்ள இந்த டர்ட் பைக்கில் 180 சிசி எஞ்சின் பொருத்தப்பட இருப்பதாகவும், இதன் விலை ரூ.1.1 லட்சம் முதல் ரூ.1.3 லட்சம் வரை இருக்கும் என பெயர் கூற விரும்பாத ஹீரோ ஹோண்டா அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
வெளிநாட்டிலிருந்து உதிரிபாகங்களாக இறக்குமதி செய்து டர்ட் பைக்கை இந்தியாவில் அசெம்பிள் செய்ய உள்ளதாம் ஹீரோ ஹோண்டா. இந்த பைக் மூலம் விரைவில் மாற உள்ள ஹீரோ ஹோண்டாவின் புதிய பிராண்டு பெயரை சந்தையில் வெகுவாக பிரபலமடைய செய்யலாம் என்று கணக்கும் போட்டு வைத்துள்ளதாம் ஹீரோ குழுமம்.


Click it and Unblock the Notifications








