ஏறுமுகத்தில் மோட்டார்சைக்கிள் விற்பனை

TVS Apachi
சென்னை: கடந்த மாதம் விற்பனை 18 சதவீதத்திற்கு மேல் வளர்ச்சி கண்டதாக டிவிஎஸ் மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் இருசக்கரம் மற்றும் மூன்று சக்கர வாகனங்கள் என அனைத்தையும் சேர்த்து அந்த நிறுவனம் 1,85,930 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இதில், இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கை மட்டும் 1,81,891ஆக இருந்தது.

கடந்த ஆண்டு மேமாத விற்பனையுடன் (1,54,667)ஒப்பிடும்போது, மோட்டார்சைக்கிள் விற்பனை 17.6 சதவீதம் அதிகரித்துள்ளது. விற்பனை வளர்ச்சி மிகுந்த மகிழ்ச்சி தருவதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

பஜாஜ்:

இதேபோன்று மோட்டார்சைக்கிள் உற்பத்தியில் இரண்டாவது இடத்தில் பஜாஜ் ஆட்டோ நிறுவனமும் 18 சதவீத விற்பனை வளர்ச்சியை சந்தையில் பதிவு செய்துள்ளது. கடந்த மாதம் 3,17,989 மோட்டார்சைக்கிள்களை பஜாஜ் விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டு மேமாதத்தில் விற்பனை 2,69,488 மோட்டார்சைக்கிள்களாக இருந்தது.

ஹீரோ ஹோண்டா:

கடந்த மாதமும் ஹீரோ ஹோண்டாவின் மோட்டார்சைக்கிள் விற்பனை 5 லட்சத்தை கடந்தது. கடந்த ஆண்டு மேமாத விற்பனையுடன்(4,35,933மோட்டார்சைக்கிள்கள்)ஒப்பிடும்போது, கடந்த மாதம் விற்பனை (5,00,234 மோட்டார்சைக்கிள்கள்) 14.7 சதவீதம் உயர்ந்துள்ளது.

ஹோண்டா:

ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் விற்பனை கடந்த மாதம் 6 சதவீதமாக அதிகரித்துள்ளது. கடந்த மாதம் அந்த நிறுவனம் 1,45,729 மோட்டார்சைக்கிள்கள் மற்றும் ஸ்கூட்டர்களை விற்பனை செய்துள்ளது.

யமஹா:

யமஹா நிறுவனத்தின் மோட்டார்சைக்கிள் விற்பனை 58 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு மேமாதத்தில் 25,033 மோட்டார்சைக்கிள்களை விற்பனை செய்திருந்த அந்த நிறுவனம், கடந்த மாதம் 38,812 மோட்டார்சைக்கிள்களை விற்பனை செய்து நல்ல விற்பனை வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

சுஸுகி:

சுஸூகி மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் விற்பனையும் வேகமாக வளர்ந்து வருகிறது. கடந்த மாதம் அந்த நிறுவனம் 30,222 மோட்டார்சைக்கிள்களை விற்பனை செய்து 39 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

மொத்தத்தில் கடந்த மாதம் அனைத்து நிறுவனங்களின் மோட்டார்சைக்கிள் விற்பனையும் குறிப்பிடத்தக்க அதிகரித்து நல்ல விற்பனை வளர்ச்சியை சந்தையில் பதிவு செய்துள்ளன.

More from DriveSpark

Article Published On: Friday, June 3, 2011, 12:11 [IST]
English summary
Motorcycle sales in the country during last month continuous on its growing path. Many motorcycle companies post a strong growth figure in May 2011
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+