ஸ்கூட்டர்களுக்கு கிராக்கி அதிகம் உள்ளது- மஹிந்திரா

வாகன தயாரிப்பில் முன்னிலை வகிக்கும் மஹிந்திரா நிறுவனம், கடந்த ஆண்டு இருசக்கர வாகன தயாரிப்பிலும் கால் பதித்தது.
பைக் மற்றும் ஸ்கூட்டர்களை தயாரித்து வரும் மஹிந்திரா மோட்டார்சைக்கிள் நிறுவனம் சந்தையில் நிதானமான வளர்ச்சியை பதிவு செய்து வருகிறது.
இந்த நிலையில், சந்தையில் ஸ்கூட்டர்களுக்கு கிராக்கி அதிகம் ஏற்பட்டுள்ளதால், அதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்று மஹிந்திரா தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மஹிந்திரா ஆம்ப் நிறுவனத்தின் விற்பனைப் பிரிவு துணைத்தலைவர் தர்மேந்திர மிஸ்ரா கூறியதாவது:
" கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஸ்கூட்டர் சந்தை அதளபாதாளத்தில் இருந்தது. ஆனால், தற்போது ஸ்கூட்டர்களுக்கு சந்தையில் எக்கச்சக்க மவுசு ஏற்பட்டுள்ளது. ஸ்கூட்டர் விற்பனையிலும் நல்ல வளர்ச்சியை பார்க்க முடிகிறது.
எனவே, ஸ்கூட்டர் தயாரிப்புக்கு முக்கியத்துவம் கொடு்த்து வருகிறோம். அதேவேளை, 125 சிசி மோட்டார்சைக்கிள் தயாரிப்புக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படும். நடப்பாண்டில் இரட்டை இலக்க வளர்ச்சியை எட்டுவோம் என்ற நம்பிக்கை உள்ளது," என்றார்.


Click it and Unblock the Notifications








