ரூ.40,000 விலையில் புதிய 100சிசி பைக்: ஹோண்டா அறிவிப்பு

Honda Twister
ரூ.40,000 முதல் ரூ.45,000 வரையிலான விலையில் புதிய 100சிசி மோட்டார்சைக்கிளை அறிமுகப்படுத்த ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

ஹீரோ ஹோண்டாவிலிருந்து பிரிந்துவிட்ட ஜப்பானை சேர்ந்த ஹோண்டா நிறுவனம் இந்திய சந்தையில் அதிவேமான விரிவாக்க பணிகளை மேற்கொண்டுள்ளது.

தனது உற்பத்தி திறனை அதிகரிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் அந்த நிறுவனம், தற்போது மார்க்கெட்டில் முன்னிலை பெற தனது மாடல்களை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.

மேலும், கிராமப்புற மார்க்கெட்டை தன் வசப்படுத்தும் வகையில் புதிய 100சிசி பைக்கை அடுத்த நிதியாண்டில் அறிமுகம் செய்யவும் திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து ஹோண்டா மார்க்கெட்டிங் பிரிவு துணைத்தலைவர் என்கே.ரத்தன் கூறுகையில்," வரும் ஜனவரியில் டெல்லியில் நடைபெறும் ஆட்டோ எக்ஸ்போவில் புதிய 100சிசி பைக்கை அறிமுகம் செய்ய இருக்கிறோம்.

அடுத்த நிதியாண்டில் இந்த புதிய பைக் மார்க்கெட்டில் விற்பனைக்கு கொண்டு வரப்படும். தற்போது இந்த பைக் ஜப்பானில் உள்ள எங்களது வடிவமைப்பு மையத்தில் வடிவமைக்கப்பட்டு வருகிறது. இந்த வடிவமைப்பு பணிகளில் இந்திய எஞ்சினியர்களும் இணைந்து செயல்பட்டு வருகின்றனர்.

மேலும், கிராமப்புற சந்தையில் வர்த்தகத்தை விரிவாக்கும் வகையில் புதிதாக 300 விற்பனை மையங்களை நடப்பு நிதி ஆண்டில் திறக்க இருக்கிறோம்," என்றார்.

More from DriveSpark

Article Published On: Thursday, September 8, 2011, 10:50 [IST]
English summary
Honda Motors, the Japanese two wheeler manufacturer has revealed plans to launch a 100cc motorcycle in India by early 2013. The company which split from long term partner Hero currently does not have a 100cc motorcycle.Mr Naresh Ranjan, the marketing head of Honda Motorcycle & Scooter India said the 100cc motorcycle will be out by early 2013. He did not elaborate any further details about the product.It will be priced in the range of Rs 40,000 to Rs 45,000.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+