பல்சர் 250 சிசியை விரைவில் களமிறக்க பஜாஜ் ஆயத்தம்?

மக்களின் எதிர்பார்ப்புக்கு தக்கபடி, பல்சரின் புதிய அவதாரங்களை பஜாஜ் ஆட்டோ தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறது.
135சிசி, 150சிசி, 180சிசி, 220 சிசி திறன் கொண்ட பல்சர் பைக்குகள் இந்திய சாலைகளை அலங்கரித்து வருகின்றன.
இதில், பிரிமியம் பைக் அந்தஸ்தை பெற்றுள்ள 220 சிசி பல்சர், அதன் செக்மென்ட் விற்பனையில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில், பல்சரின் மார்க்கெட் பங்களிப்பை தக்கவைக்கும் விதமாக 250 சிசி திறன் கொண்ட புதிய பல்சர் ஸ்போர்ட்ஸ் பைக்கை வரும் செப்டம்பரில் களமிறக்க பஜாஜ் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதிய வடிவமைப்பு மற்றும் அதிக பவர் கொண்டதாக வரும் இந்த புதிய பல்சர் பைக் மார்க்கெட்டில், தனது மதிப்பை இன்னும் ஒரு படி மேலே உயர்த்திக்கொள்ளும் வகையில் இருக்கும் என்று கூறப்படுகிறது.
பல்சர் 250சிசி பைக் குறித்து பஜாஜ் ஆட்டோ இதுவரை வாய்திறக்கவில்லை. இருந்தபோதும், வரும் செப்டம்பரில் மேம்படுத்தப்பட்ட புதிய 250 சிசி பைக் அறிமுகப்படுத்தப்படும் என்று அந்த நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் ராஜீவ் பஜாஜ் கூறியிருக்கிறார்.
இதன்மூலம், 250சிசி திறன்கொண்ட பல்சர் சந்தைக்கு விரைவில் வருவது உறுதியாகி இருப்பதாகவும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications








