மார்ச்சில் கார், பைக் விற்பனை அபார வளர்ச்சி

இதுகுறித்து எஸ்.ஐ.ஏ.எம்., வெளியிட்டுள்ள அறிக்கை:
"கடந்த மார்ச் மாதம் உள்நாட்டு சந்தையில் மொத்தம் 1,94,199 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது, கடந்த ஆண்டு மார்ச் மாத விற்பனையுடன் (1,56,145 கார்கள்) ஒப்பிடும்போது, 24.37 சதவீத வளர்ச்சி கண்டுள்ளது.
இதேபோன்று, மோட்டார்சைக்கிள் விற்பனையும் அபார வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. கடந்த மார்ச் மாதம் மொத்தம் 10,96,233 மோட்டார்சைக்கிள்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் 9,20,154 மோட்டார்சைக்கிள்கள் விற்பனையாகி இருந்தது. இதை ஒப்பிடும்போது, மார்ச்சில் மொத்த விற்பனை 19.14 வளர்ச்சியை கண்டுள்ளது.
இதில், உள்நாட்டில் மட்டும் 8,40,941 மோட்டார்சைக்கிள்கள் விற்பனையாகி 18.72 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.
கடந்த மார்ச்சில் அனைத்து ரகங்களையும் உள்ளடக்கிய மொத்த வாகன விற்பனை 14,65,909 ஆக பதிவானது. இது கடந்த ஆண்டு மார்ச்சை காட்டிலும், 19.42 சதவீதம் உயர்ந்துள்ளது.


Click it and Unblock the Notifications








