ஸ்பெஷல் எடிசன் மோட்டார்சைக்கிள்களை அறிமுகப்படுத்துகிறது யமஹா

கிராண்ட் பிரிக்ஸ் ரேஸில் யமஹா பங்குபெற்று 50 ஆண்டுகள் நிறைவவடைகிறது. இதையடுத்து, 4 மாடல்களில் புதிய ஸ்பெஷல் எடிசன் மோட்டார்சைக்கிள்களை அறிமுகப்படுத்துகிறது யமஹா.
ஆனால், ஸ்பெஷல் எடிசன் மாடல்கள் குறித்த புகைப்படங்களை யமஹா வெளியிடவில்லை. அதேவேளை, ஒயஇசட்எப்-ஆர்-1, ஒய்இசட்எப்-ஆர்6, எப்இசட்-8, ஒய்இசட்எப்-ஆர்-125 ஆகிய நான்கு மாடல்களில் ஸ்பெஷல் எடிசன் பைக்குகள் அறிமுகப்படுத்தப்படும் என்று அதன் இணையதளத்தில் தெரிவித்துள்ளது.
இதில், ஆர்-1 மோட்டார்சைக்கிள் எஞ்சின் மற்றும் வெளிப்புற வடிவமைப்பில் மாற்றங்களுடன் வர இருப்பதாக யமஹா வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆர்-6 மாடல் காஸ்மெட்டிக் மாற்றங்களுடன் வரும் என்று அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications








