கேடிஎம் டியூக் 200 பைக்கை அறிமுகப்படுத்த பஜாஜ் ஆயத்தம்

Bajaj KTM Duke
பைக் ரேஸ் பிரியர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ள 200சிசி கேடிஎம் டியூக் ஆப் ரோடர் பைக்கை விரைவில் அறிமுகப்படுத்த பஜாஜ் ஆட்டோ ஆயத்தமாகி வருகிறது.

ஆஸ்திரிய நாட்டு நிறுவனமான கேடிஎம் நிறுவனம் தயாரிக்கும் ஆப் ரோடு பைக்குகள் சர்வதேச அளவில் புகழ் வாய்ந்தவை. தரமாகவும் அதேநேரத்தில் வித்தியாசமான வடிவமைப்பு மற்றும் அதிக ஆற்றல் கொண்ட எஞ்சின் கொண்ட கேடிஎம் டியூக் பைக்குகள் பல்வேறு நாடுகளில் விற்பனையில் முக்கிய இடத்தை பிடித்து வைத்துள்ளன.

இந்த நிலையில், அடுத்த மாத இறுதிக்குள் இந்தியாவில் கேடிஎம் டியூக் 200 பைக்கை பஜாஜ் ஆட்டோ அறிமுகப்படுத்த இருக்கிறது. இதற்காக, நாட்டின் பல்வேறு பகுதிகளில் கேடிஎம் டியூக் 200 பைக்கின் சோதனை ஓட்டங்கள் தீவிரமாக நடந்து வருகின்றன.

இந்த பைக்கில் 4 ஸ்ட்ரோக் லிக்யூடு கூல்டு 200சிசி திறன் கொண்ட எஞ்சினுடன் வருகிறது. இந்த எஞ்சின் 25 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கும். இந்த ரகத்தில் இந்திய மார்க்கெட்டில் விற்பனை செய்யப்பட்டு வரும் பைக்குகளில் அதிக சக்தி கொண்ட பைக்காக இது இருக்கும் என்று ஆட்டோமொபைல் துறையினர் தெரிவிக்கின்றனர்.

மேலும், எலக்ட்ரிக் ஸ்டார்டர், 6 ஸ்பீடு மேனுவல் ட்ரான்ஸ்மிஷன், லிக்யூடு கூல்டு வாட்டர் பம்ப் சிஸ்டம் உள்ளிட்ட சிறப்புகளுடன் வருகிறது.மேலும், இந்த பைக் ஆப்ரோடு சாகச பயணங்களுக்கு ஏற்ற வகையில் 170 மிமீ கிரவுண்டு கிளியரன்ஸ் கொண்டதாக இருக்கும்.

இந்த பைக் ஹோண்டா சிபிஆர் 250 ஆர் பைக்குக்கு கடும் போட்டியை கொடுக்கும் என்று கருதப்படுகிறது.

Article Published On: Sunday, November 13, 2011, 12:11 [IST]
English summary
Bajaj all set to launch Brand new off road bike KTM Duke 200 in India soon. This bike will come equipped with liquid cooled 200 cc engine and it can generate 25 bhp power.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+