விற்பனையை பெருக்க 130 புதிய டீலர்கள் நியமனம்: பஜாஜ் ஆட்டோ புதிய முயற்சி

Bajaj Auto
டெல்லி: இரு சக்கர வாகன விற்பனையை உயர்த்தும் வகையில், புதிதாக 130 டீலர்களை பஜாஜ் ஆட்டோ நியமித்துள்ளது. இதன்மூலம் 7000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரு சக்கர மற்றும் மூன்று சக்கர வாகன தயாரிப்பில் நாட்டின் மிகப்பெரிய நிறுவனமான பஜாஜ் ஆட்டோ விளங்குகிறது. இரு சக்கர வாகன விற்பனையில் இரண்டாம் இடம் வகிக்கும் இந்நிறுவனத்துக்கு நாடு முழுவதும் 400 க்கும் மேற்பட்ட டீலர்கள் உள்ளனர். இந்நிலையில், புதிதாக 130 டீலர்களை நியமித்துள்ளதாக பஜாஜ் ஆட்டோ தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பஜாஜ் ஆட்டோவின் விற்பனைப் பிரிவு தலைவர் கூறியதாவது:

விற்பனையை உயர்த்த நாடு முழுவதும் புதிதாக 130 டீலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வரும் மார்ச் மாதம் முதல் புதிய டீலர் பாயின்டுகளில் ஆரம்பகட்ட சேவைகள் துவங்கும். வரும் ஜூன் மாதம் இவை முழு அளவில் செயல்பட துவங்கும்.

கிராமப்புறங்கள் மற்றும் சிறு நகரங்களில் எங்கள் நிறுவனத்தின் சேவை கிடைக்கும் வகையில் புதிய டீலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம், நிறுவனத்தின் டீலர்கள் எண்ணிக்கை 600ஆக உயர்வதோடு, 7000 பேருக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும் என்றார்.

More from DriveSpark

Article Published On: Tuesday, January 25, 2011, 17:12 [IST]
English summary
By June this year, the country’s second largest two wheeler maker Bajaj would have installed 130 new dealers across the country. This would envisage job opportunities to nearly 7000 personnel and according to the President of the company for Motorcycle business. The company has the objective to reach the uncovered regions, there by increasing its market area, sales and market share.The smaller towns are hitherto secondary regions which need support and identification, he said further.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+