டெக்கான் சார்ஜர்ஸ் அணியின் அதிகாரப்பூர்வ பங்குதாரர் யமஹா மோட்டார்ஸ்

நான்காம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இந்த போட்டிகளில் பங்கேற்றுள்ள அணிகளுடன் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் பங்குதாரர்களாக செயல்பட்டு வருகின்றன.
இந்த வரிசையில், ஐதராபாத் டெக்கான் சார்ஜர்ஸ் அணியின் அதிகாரப்பூர்வ பங்குதாரராக யமஹா மோட்டார்ஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக போடப்பட்டுள்ள ஒப்பந்தத்தின்படி, டெக்கான் சார்ஜர்ஸ் அணியின் பங்குதாரராக யமஹா ஓராண்டுக்கு செயல்படும்.
இந்த ஒப்பந்தத்தையடுத்து, யமஹா மோட்டார்ஸ் சின்னம்(லோகோ)பொறித்த ஹெல்மெட் மற்றும் தொப்பிகளை அணிந்து டெக்கான் சார்ஜர்ஸ் அணி வீரர்கள் ஆடுவார்கள். மேலும், விளம்பரங்கள் செய்வதில் இரு தரப்பும் இணைந்து செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து யமஹா மோட்டார்ஸ் வர்த்தக தலைவர் ராய் குரியன் கூறியதாவது:
"ஐபிஎல் போட்டிகள் மூலம் யமஹாவின் பிராண்டு இமேஜை, மக்களிடத்தில் வேகமாகவும், வலுவாகவும் பரவ செய்வதற்கு இந்த ஒப்பந்தம் பெரிதும் உதவும். விளம்பரங்கள் மற்றும் எங்களது விழாக்களில் டெக்கான் சார்ஜர்ஸ் அணியின் வீரர்கள் மூன்று பேரின் புகைப்படங்களை பயன்படுத்த முடியும்.
இந்த ஒப்பந்தத்தின் மூலம், இரு தரப்புக்கும் பரஸ்பரம் விளம்பரம் கிடைக்கும். மேலும், ஐதராபாத்தில் எங்களுக்கு வலுவான வர்த்தகம் உள்ளது. டெக்கான் சார்ஜர்ஸ் அணியின் அதிகாரப்பூர்வ பங்குதாரராக செயல்படுவதன் மூலம் ஐதராபாத் வாடிக்கையாளர்களுடனான பிணைப்பு அதிகரிக்கும்," என்றார்.


Click it and Unblock the Notifications








