முதல் காலாண்டில் பஜாஜ் ஆட்டோ லாபம் 21% அதி்கரிப்பு

கடந்த நிதி ஆண்டின் முதல் காலாண்டுடன் ஒப்பிடுகையில், தற்போது அந்த நிறுவனத்தின் நிகர லாபம் 21 சதவீதம் உயர்வு கண்டுள்ளது.
முதல் காலாண்டில் பஜாஜ் ஆட்டோவின் மொத்த வர்த்தக மதிப்பு ரூ.4,850 கோடியாக பதிவாகியுள்ளது. இது கடந்த ஆண்டு வர்த்தக மதிப்புடன் ஒப்பிடுகையில், 21 சதவீதம் கூடுதலாகும்.
இதில், ஏற்றுமதி மூலம் ரூ.1,688 கோடிக்கு அந்த நிறுவனம் வர்த்தகத்தை செய்துள்ளது. கடந்த ஆண்டுடன் இதை ஒப்பிட்டு பார்த்தால், ஏற்றுமதி வர்த்தகம் 40 சதவீதம் அளவுக்கு உயர்ந்துள்ளது.
வருவாய் உயர்வு குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள பஜாஜ் மேலாண் இயக்குனர் ராஜீவ் பஜாஜ்," முதல் காலாண்டில் 75,000 பல்சர் பைக்குகளையும், ஒரு லட்சம் டிஸ்கவர் 125சிசி பைக்குகளையும் விற்பனை செய்துள்ளதாக தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications








