'மெகா' கூட்டணி அமைத்த மஹிந்திரா-யமஹா!

இந்தியாவின் மிகப்பெரிய வாகன தயாரிப்பு நிறுவனமான மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம் கடந்த ஆண்டு கைனெடிக் நிறுவனத்தை கையகப்படுத்தி அதன் மூலம் இருசக்கர வாகன தயாரிப்பிலும் ஈடுபட்டுள்ளது.
கைனெடிக் நிறுவனத்தின் தொழில்நுட்பம் போதுமான அளவு இல்லாததால் சந்தையில் போட்டி போட முடியாத நிலையில் மஹிந்திரா உள்ளது. இந்த குறையை போக்கி புதிய இருசக்கர வாகனங்களை அறிமுகப்படுத்தும் வகையில் இருசக்கர வாகன தயாரிப்பில் புகழ்பெற்ற ஜப்பானை சேர்ந்த யமஹா நிறுவனத்துடன் மஹிந்திரா கைகோர்த்துள்ளது.
இதற்காக, மஹிந்திரா மற்றும் யமஹா நிறுவனங்கள் இணைந்து புதிய கூட்டுக்குழுமத்தை தொடங்கியுள்ளன. இதற்காக ஒப்பந்தமும் செய்யப்பட்டுள்ளது.
இரு நிறுவனங்களும் பயன்பெறும் வகையில் ஒப்பந்தத்தில் வழி வகை செய்யப்பட்டுள்ளது. புதிய இரு சக்கர வாகனங்கள் தயாரிப்புக்கான தொழில்நுட்பத்தை மஹிந்திராவுக்கு யமஹா வழங்கும்.
இதேபோன்று, பைக்குகளை விற்பனை செய்வதற்கு மஹிந்திரா ஷோரூம்களை யமஹா பயன்படுத்திக்கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிதாக உருவாகியுள்ள இந்த இரு நிறுவனங்களின் கூட்டுக்குழுமத்தில் மஹிந்திரா 51 சதவீத பங்குகளையும், யமஹா 41 சதவீத பங்குகளையும், மூன்றாவது நபர் 8 சதவீத பங்குகளையும் வைத்திருப்பர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








