"மீண்டும் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தும் திட்டம் இல்லை"-ராஜீவ் பஜாஜ்

இருசக்கர வாகன விற்பனை சந்தையில் நீண்ட காலம் கோலோய்ச்சி வந்த பஜாஜ் ஸ்கூட்டர்கள், 100சிசி பைக்குகளின் வரவால் ஓரங்கப்பட்டது.விற்பனை வெகுவாக குறைந்ததால்,கடந்த 2007ம் ஆண்டு ஸ்கூட்டர் உற்பத்தியை பஜாஜ் நிறுவனம் முற்றிலும் நிறுத்தியது.
அதன்பின்,கியர் இல்லாத கிரிஸ்டல் மாடல் ஸ்கூட்டரை விற்பனை செய்து வந்தது.அதுவும் மார்க்கெட்டில் எடுபடாததால்,கடந்ட 2009ம் ஆண்டு ஸ்கூட்டர் உற்பத்திக்கு பஜாஜ் முழுக்கு போட்டது.
இந்நிலையில்,இந்திய மார்க்கெட்டில் கியர் இல்லாத பவர் ஸ்கூட்டர்களின் விற்பனை சக்கைபோடு போடுகிறது.இதையடுத்து,ஸ்கூட்டர் உற்பத்தியை மீண்டும் துவங்கும் திட்டம் இருப்பதாக பஜாஜ் ஆட்டோ தலைவர் ராகுல் பஜாஜ் கடந்த சில நாட்களுக்கு முன் சூசகமாக தெரிவித்தார்.
ஆனால்,ஸ்கூட்டர் தயாரிப்பை மீண்டும் துவங்குவதற்கு ராகுல் பஜாஜின் மகனும்,நிறுவனத்தின் மேலாண் இயக்குனருமான ராஜீவ் பஜாஜ் எதிர்ப்பு தெரிவித்தார்.இதனால்,தந்தை மகனுக்கு இடையே கருத்து வேறுபாடு எழுந்தது.இறுதியில் ஸ்கூட்டர் தயாரிப்பு குறித்த முடிவை ராஜீவ் பஜாஜ் வசமே விடுவதாக ராகுல் பஜாஜ் தெரிவித்தார்.
இதையடுத்து,ஸ்கூட்டர் உற்பத்தியை துவங்கும் முடிவு குறித்து ராஜீவ் பஜாஜ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.அதில்,"ஸ்கூட்டர் உற்பத்தியை துவங்கும் திட்டம் எதுவும் இல்லை.தற்போது சர்வதேச மார்க்கெட்டை பிடிப்பதில் முழு கவனம் செலுத்தி வருகிறோம்,"என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications








