யூனிகார்ன் காத்திருப்பு காலம் 6 மாதங்களாக அதிகரிப்பு

கடந்த 2005ம் ஆண்டு இந்திய சந்தையில் யூனிகார்ன் அடியெடுத்து வைத்தது. ஜப்பானிலுள்ள ஹோண்டா வடிவமைப்பு மையத்தில் முற்றிலும் இந்திய சந்தையைக்கு தக்கவகையில் இந்த பைக் வடிவமைக்கப்பட்டது.
பின்பக்கம் ஒற்றை ஷாக்அப்சார்பர் கொண்ட வி்த்தியாசமான தொழில்நுட்பத்துடன் வந்த யூனிகார்ன் இந்திய மக்களை திரும்பி பார்க்க வைத்தது.
இதனால்,150 சிசி ரக பைக்குகளில் பஜாஜ் நிறுவனத்தின் பல்சர் மற்றும் டிவிஎஸ் நிறுவனத்தின் அப்பாச்சி பைக்குகளுக்கு யூனிகார்ன் கடும் சந்தை போட்டியையும், விற்பனையில் நெருக்கடியையும் கொடுத்தது.
இந்த நிலையில்,யூனிகார்ன் பைக்கின் மார்க்கெட்டை தக்கவைக்கும் விதமாக செல்ப் ஸ்டார்ட்டர்,பிஎஸ்-3 மாசுக்கட்டுப்பாட்டு அம்சங்களுடன் புதிய யூனிகார்ன் பைக்கை ஹோண்டா அறிமுகம் செய்தது.
முன்பைவிட யூனிகார்ன் பைக்கின் மதிப்பும், மார்க்கெட்டும் உயர்ந்தது. இந்த நிலையில், யூனிகார்னுக்கு புக்கிங் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், குறித்த நேரத்தில் வாடிக்கையாளர்களுக்கு டெலிவிரி கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதைக்கருத்தில்கொண்டு, யூனிகார்ன் பைக்கின் காத்திருப்பு காலத்தை 6 மாதங்களாக ஹோண்டா உயர்த்தியுள்ளது. இது வாடிக்கையாளர் மத்தியில் பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications








