மோட்டார்சைக்கிள்களுக்கு டீலர்கள் வழங்கும் சலுகைகள்

CD Twister
டெல்லி: இருப்பை குறைப்பதற்காக குறிப்பிட்ட மோட்டார்சைக்கிள்கள் மாடல்களுக்கு டீலர்களே பல்வேறு சலுகைகளை வழங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறப்பு கடன் திட்டங்கள் மற்றும் இலவச ஆக்சசெரீஸ் என இந்த பட்டியல் நீள்கிறது.கடந்த சில மாதங்களாகவே கார் விற்பனை மந்தமாக உள்ளது. இதையடுத்து, கார் நிறுவனங்கள் பல்வேறு சலுகைகளை அறிவித்து கார் விற்பனையை அதிகரிக்க முயற்சிகளை மேற்கொண்டுள்ளன.

அதேவேளை, மோட்டார்சைக்கிள் விற்பனை நல்ல வளர்ச்சி கண்டு வருகிறது. இதனால், மோட்டார்சைக்கிள் நிறுவனங்கள் எந்த சலுகை அறிவிப்புகளையும் வெளியிடவில்லை. இந்த நிலையில்,போனியாகாமல் குடோனை அடைத்துக்கொண்டிருக்கும் சில மாடல்களுக்கு டீலர்களே அதிரடி சலுகைகளை வழங்குகின்றனர்.

எடுத்துக்காட்டாக, ஹோண்டா நிறுவனத்தின் 110 சிசி திறன்கொண்ட சிபி ட்விஸ்ட்டர் பைக் ரூ.49,775 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அதேசமயம், மார்க்கெட் லீடரான ஹீரோஹோண்டாவின் 100 சிசி ரகத்தை சேர்ந்த ஸ்பெளண்டர் பைக் ரூ.41,350 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

இதனால், ஹோண்டாவின் ட்விஸ்ட்டர் பைக்கிற்கு வாடிக்கையாளர்கள் முன்னுரிமை கொடுக்கவில்லை. இதைக்கருத்தில்கொண்டு, ட்விஸ்ட்டர் பைக்கின் விலையை குறைப்பதற்கு, டெல்லியில் சில ஹோண்டா டீலர்கள் ட்விஸ்ட்டருக்கு ரூ.3,500வரை தள்ளுபடி வழங்குகின்றனர்.

ட்விஸ்ட்டர் பைக்குக்கு ஹோண்டா நிறுவனம் எந்த சலுகையையும் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோன்று, பஜாஜ் ஆட்டோவின் 100 சிசி டிஸ்கவர் பைக்குக்கு 0% வட்டியில் கடன் வழங்கும் திட்டத்தை வங்கிகளுடன் இணைந்து டீலர்கள் வழங்குகின்றனர்.

மோட்டார்சைக்கிள் உற்பத்தியில் மூன்றாம் இடம் வகிக்கும் டிவிஎஸ் நிறுவனத்தின் டீலர்களும் சலுகைகளை வழங்கி வருகின்றனர். ஸ்டார் ஸ்போர்ட் பைக்கிற்கு இன்ஸ்யூரன்ஸ் மற்றும் சாலைவரியில் ரூ.1,500 வரை வாடிக்கையாளர்களுக்கு டிவிஎஸ் டீலர்கள் தள்ளுபடி வழங்குகின்றனர்.

அதேவேளை, பைக் விற்பனை தொடர்ந்து முன்னேற்ற பாதையில் செல்வதால், சலுகைகளை அறிவிப்பது குறித்து மோட்டார்சைக்கிள் உற்பத்தி நிறுவனங்கள் சிந்திக்கவில்லை. இதுகுறித்து பஜாஜ் ஆட்டோ மார்க்கெட்டிங் பிரிவு தலைவர் மிலிந்த் பாடே கூறுகையில்,"பைக் விற்பனை தொடர்ந்து சிறப்பான வளர்ச்சி கண்டு வருகிறது. இதனால் சிறப்பு சலுகைகளை அறிவிப்பது குறித்து தற்போதைக்கு எந்த எண்ணமும் இல்லை," என்று கூறினார்.

More from DriveSpark

Article Published On: Tuesday, July 19, 2011, 11:29 [IST]
English summary
Two wheeler dealers are offering several freebies to attract buyers despite of the two wheeler market showing a two digit growth rate. Two wheeler dealers are offering special schemes such as free accessories,lowered interest rates for loans and free service to buyers to increase sales. It was mentioned in the report that Honda dealers are thus offering discounts of up to Rs 3,500 in select markets on the CB Twister.However, The Bajaj auto's 100cc entry level bike, Discover, is being offered at 0 percent rate of interest by dealers. The dealers of TVS Motors is luring customers with a few insurance and road tax benefits in certain markets on their 110 cc Star City bike with deal benefits of up to Rs 1500, according to reports.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+