'ஹீரோ மோட்டோ': ஹீரோ ஹோண்டாவின் புதிய பிராண்டு பெயர்?

ஹீரோ ஹோண்டா குழுமத்திலிருந்து ஜப்பானை சேர்ந்த ஹோண்டா நிறுவனம், சமீபத்தில் விலகிக்கொண்டது. இதையடுத்து, ஹீரோ ஹோண்டாவில் அங்கம் வகிக்கும் ஹீரோ நிறுவனம் இருசக்கர வாகன உற்பத்தியில் தனித்து ஈடுபட உள்ளது.
மேலும், ஹீரோ ஹோண்டாவின் பிராண்டு பெயரை மாற்றவும் ஹீரோ முடிவு செய்துள்ளது. புதிய பிராண்டு பெயர் மற்றும் சின்னம் உருவாக்கும் பணிகள் பிரிட்டனை சேர்ந்த பிரபல நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
புதிய பிராண்டுக்காக ரூ.200 கோடி வரை செலவிடுகிறது ஹீரோ நிறுவனம். இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் ஹீரோ ஹோண்டா பிராண்டுக்கு தனி மவுசு உள்ளதால், புதிய பிராண்டு மற்றும் சின்னங்கள் உருவாக்குவதில் மிகுந்த சிரத்தை எடுத்து செய்து வருகிறது பிரிட்டன் நிறுவனம்.
இந்த நிலையில், ஹீரோ மோட்டார்ஸ் என்பதை சுருக்கி ஹீரோ மோட்டோ என்று பெயரிட முடிவு செய்யப்பட்டுள்ளதாக ஆட்டோமொபைல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications








